மோடி அரசின் விவசாயச் சட்டங்களுக்கு எதிராக, டெல்லியில் வழக்கத்துக்கு மாறாக அதிகமாக உள்ள, 3 டிகிரி குளிரில், விவசாயிகள் போராடிக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை குரு தேஜ்பகதூரின் தியாகத்தை குறிக்கும் வகையில் பிரதமர் மோடி டெல்லியில் உள்ள குருத்வாரா ரகாப்கஞ்ச்-க்கு சென்றுள்ளார் என்று தி ஹிந்து செய்தி தெரிவிக்கிறது. சீக்கிய குரு தேஜ் பகதூர், முகலாய பேரரசர் அவுரங்கசீபின் உத்தரவின் பேரில் கொல்லப்பட்ட பிறகு அவரது உடல் எரியூட்டப்பட்ட இடத்தில் இந்த குருத்வாரா கட்டப்பட்டுள்ளது.
விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையின் போது மோடி என்ன பேசுவார்? – பாஜகவுக்கு அந்த புரிதல் உள்ளதா?
போக்குவரத்தை திருப்பி விடாமல், பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் மோடி குருத்வாராவுக்கு வந்தது பலரை ஆச்சரியத்துள்ளாக்கியதாகவும் தி ஹிந்து தெரிவித்துள்ளது.
குருத்வாராவில் வழிபாடு செய்த மோடி, அங்கு உள்ள ஊழியர்களிடம் உரையாடி, அங்கு வந்திருந்தவர்களிடம் உரையாடியுள்ளார்.
மோடியின் குருத்வாரா வழிபாடு போராடும் சீக்கிய விவசாயிகளின் உணர்வுகளை சமாதானப்படுத்துவதற்கானது என்று தி ஹிந்து கருத்து தெரிவித்துள்ளது. பாஜக தலைவரகள், காலிஸ்தானி பிரிவினைவாதிகளும் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக குற்றம் சாட்டுவதால் விவசாயக் குழுக்கள் கடும் அதிருப்தியில் உள்ளன.
“போராடும் விவசாயிகளை காலிஸ்தானி ஆதரவாளர்கள் என்பதா” – அகாலி தள் கண்டனம்
இது தொடர்பாக, யூத் காங்கிரஸ் தேசிய பிரச்சார தலைமை பொறுப்பாளர் பிவி சிறீவத்சா, “33 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். மோடி குருத்வாராவுக்குப் போவது எதையும் மாற்றி விடப் போவதில்லை” என்று ட்வீட் செய்துள்ளார்.
33 FARMERS ARE DEAD
A Gurudwara visit won't change anything apart from getting Modi likes on Instagram & Facebook.
This isn't a religious issue. It's about Agriculture, Livelihood & Cronyism.
Why doesn't PM travel 20 kms to Delhi's Borders to meet & talk to protesting Farmers?
— Srivatsa (@srivatsayb) December 20, 2020
“இது மதப் பிரச்சனை இல்லை, இது விவசாயம், வாழ்வாதாரம் தொடர்பான பிரச்சனை. பிரதமர் 20 கிமீ தூரத்தில் உள்ள டெல்லி எல்லைக்குப் போய் போராடும் விவசாயிகளுடன் ஏன் பேச மறுக்கிறார்” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்
“நரேந்திர மோடி, அதிகாலையில் குருத்வாராவுக்கு போனதால் சீக்கிய விவசாயிகள் சமுதாயத்திடமிருந்து எந்த ஆதரவையும் நீங்கள் பெற்று விடப் போவதில்லை.” என்று காங்கிரஸ் ஆதரவாளரும், தேசிய பங்குச் சந்தை வர்த்தகருமான ரவீந்தர் கபூர் ட்வீட் செய்துள்ளார்.
Narendra Modi , Your visit to the Gurudwara early morning will get you no sympathy from the Sikh farmers community .
And nor will it save your capitalists friends AMBANI – ADANI from the disaster ahead. pic.twitter.com/uLyLBBk3Bz— Ravinder Kapur (@RavinderKapur2) December 20, 2020
“இது உங்கள் நெருக்கமான நண்பர்களான அம்பானி – அதானியையும் வரவிருக்கும் அழிவிலிருந்து பாதுகாக்காது” என்றும் அவர் கூறியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.