Aran Sei

`மோடிக்கு மட்டும் லைட்டா?’ – வைரலாகும் மோடியின் கையசைவுகள்

credits:makers.in

பார்வையாளர்கள் யாரும் இல்லாத பாதையில் பிரதமர் மோடி கையசைத்தபடியே வலம் வந்தது ட்விட்டரில் கவனம் பெற்றுள்ளது.

இமாசலப் பிரதேச மாநிலம் மணாலி – லே இடையே அமைக்கப்பட்டுள்ள அடல் சுரங்கப்பாதையைப் பிரமதர் மோடி நேற்று திறந்துவைத்தார்.

கடல் மட்டத்திலிருந்து 10,000 அடி உயரத்தில் 9.02 கி.மீ தூரம் அமைக்கப்பட்டுள்ள இந்தப் பாதை உலகில் மிக நீளமான சுரங்கப்பாதையாகக் கருதப்படுகிறது.

அடல் சுரங்கப்பாதை திறப்பு விழா நிகழ்வின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி அந்தப் பாதையில் நடந்தும், திறந்த வாகனத்தில் வலம் வந்தும் சிறப்பித்தார்.

இதனிடையே, வாகனத்தில் இருந்தபடி பிரதமர் மோடி கையசைக்கும் காணொலி இணையத்தில் வெளியானது.

பிரதமர் மோடி யாருக்குக் கையசைக்கிறார் எனக் கேட்டு ட்விட்டரில் இந்தக் காணொலி தொடர்ந்து பகிரப்பட்டு வருகிறது.

பலரும் இதுகுறித்து மீம் வெளியிட்டு வருகிறார்கள். பிரதமர் மோடி தனியே கையசைத்து நடந்து வரும் வீடியோ ஒன்றும் இணையத்தில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.

காரின் முன்சீட்டில் பிரதமர் மோடி அமர்ந்திருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள பாலிவுட் பாடகி, “மோடியின் முகத்துக்கு மட்டும் லைட் வைக்கப்பட்டுள்ளதா?“ எனப் பதிவிட்டுள்ளார்.

நேஷனல் ஹெரால்ட் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், “சுரங்கப்பாதையில் வலம் வந்து இல்லாத மக்களுக்குக் கையசைத்துள்ள மோடி, மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். ட்விட்டரில் பலரும், அவருக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லையே? எதற்காக இல்லாத மக்களுக்குக் கைகாட்டுகிறார்? எனக் கேட்கிறார்கள்.”

“புகைப்படம் எடுக்கப்படுவது பிரதமர் மோடிக்குப் பிடித்தமான ஒன்று. அதே போல கண்ணுக்குத் தெரியும் மற்றும் தெரியாத மக்களுக்குக் கை அசைப்பதையும் அவர் பெரிதும் விரும்புகிறார்.” என்று கூறியுள்ளது.

2019-ம் ஆண்டு ஸ்ரீநகர் தாள் ஏரியில் ஒரு படகிலிருந்து இதேபோல பிரதமர் மோடி கையசைத்த வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகப் பகிரப்பட்டது.

 

அசாம் மாநிலத்தில் 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மேம்பாலம் திறந்து வைத்தபோது பிரதமர் மோடி யாரும் இல்லாத பாலத்தில் கையசைத்து தனியாக நடந்து வந்ததும் அதிகம் பகிரப்பட்டது.

மக்கள் ரொம்ப ஆவலுடன் எதிர்பார்க்கும் ‘மோடி வேவ்’ என்பது இதுதான் என்று ட்விட்டரில் இந்த வீடியோக்கள் வைரலாகப் பகிரப்பட்டு வருகின்றன.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்