Aran Sei

’விவசாயிகளின் பிரச்சனையை தீர்க்க முடியவில்லை என்றால், மோடி பதவி விலக வேண்டும்’ – காங்கிரஸ்

மூன்று விவசாய சட்டங்களை ரத்து செய்ய முடியாவிட்டால் பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

நேற்று (ஜனவரி 9), வரும் ஜனவரி 15 அன்று காங்கிரஸ் சார்பில் விவசாய சட்டங்களை நீக்கக் கோரி நடத்தப்படவுள்ள தொடர் போராட்டங்கள் குறித்த கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் தகவல் தொடர்பு பிரிவு தலைவர் ரந்தீப் சுர்ஜேவாலா செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.

‘விவசாய சட்டங்கள் கார்ப்பரேட்டுகளுக்கே ஆதரவானது’ – கேரள சட்டமன்றத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக தீர்மானம்

அப்போது, “விவசாயிகள் ஏன் உச்ச நீதிமன்றத்தை அனுகுவதற்கு தயங்குகின்றனர் என்று உச்ச நீதிமன்றம் யோசிக்க வேண்டும். இதற்கு முன் ரபேல் ராணுவ ஆயுத ஒப்பந்தம், குடியுரிமை திருத்தச் சட்டம், குடிமக்கள் தேசிய பதிவு, விவசாய சட்டங்கள் போன்றவற்றில் உச்ச நீதிமன்றத்தின் செயலை தெளிவாக பார்த்துவிட்டனர்.” என்று கூறியுள்ளதாக தி இந்து தெரிவித்துள்ளது.

“கடந்த 73 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக ஒரு அரசு, தனது பொறுப்பை முற்றிலுமாக கைவிட்டுட்டு, விவசாயிகளை உச்சநீதிமன்றத்தை அணுகுமாறு கூறுகிறது. இந்த மூன்று விவசாய சட்டங்களும் உச்சநீதிமன்றத்தால் இயற்றப்படவில்லை. மோடி தலைமையிலான மத்திய அரசால் பாராளுமன்றத்தில் வலுக்கட்டாயமாக நிறைவேற்றப்பட்டது.” என்று ரந்தீப் சுர்ஜேவாலா குற்றஞ்சாட்டியுள்ளார்.

விவசாய சட்டங்கள் பெரும் குழப்பத்தை தோற்றுவிக்கும் – பி சாய்நாத்

மேலும், “சட்டங்களை உருவாக்கும் பொறுப்பை இந்திய அரசியலமைப்பு உச்சநீதிமன்றத்திற்கு வழங்கவில்லை. ஆனால் அந்த பொறுப்பை இந்திய நாடாளுமன்றத்திற்கு வழங்கியுள்ளது. இந்த பொறுப்பை நிறைவேற்ற இந்த அரசால் முடியாது என்றால், ஒரு நிமிடம் கூட ஆட்சியில் இருக்க மோடி அரசுக்கு தார்மீக எந்த அதிகாரமும் இல்லை.” என்று அவர் விமர்சித்துள்ளதாக தி இந்து தெரிவித்துள்ளது.

“நாட்டின் அனாடேட்டாக்கள் (உணவு வழங்குபவர்கள்) நீதிமன்றத்திற்கு செல்ல ஏன் மறுக்கிறார்கள் என்று உச்ச நீதிமன்றம் ஆராய வேண்டும். இந்த அரசு ஏன் மீண்டும் மீண்டும், குடியுரிமை திருத்த சட்டம், குடிமக்கள் தேசிய பதிவு, விவசாய சட்டங்களுக்கு உச்ச நீதிமன்றம் போய் தீர்வு காண விரும்புகிறது. அவற்றுக்கான தீர்வு நாடாளுமன்றத்தில் காணப்பட வேண்டும்.” என்று ரந்தீப் சுர்ஜேவாலா சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த புதிய சட்டங்கள் விவசாயிகளை மட்டுமே பாதிக்கும் என்று நினைக்கிறீர்களா? – சாய்நாத்

வரும் ஜனவரி  15 ஆம் தேதி விவசாய சங்கங்களுக்கும் மத்திய அரசிற்கும் இடையிலான அடுத்த சுற்று பேச்சுவார்த்தை நடக்கவுள்ள நிலையில், அன்று காங்கிரஸ் கட்சி கிசான் ஆதிர் திவாஸை  (விவசாயிகள்  உரிமைகள் தினம்) கொண்டாடவுள்ளது.  இதில் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர், விவசாயிகள் சட்டத்தை ரத்து செய்ய கோரி ஊர்வலங்கள், உள்ளிருப்பு போராட்டங்கள், ஆளுநர்களுக்கு மனு வழங்குதல் போன்றவற்றில் ஈடுபடவுள்ளனர்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்