Aran Sei

கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் பிரதமர் மோடி படம் : அறிக்கையளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தைப் பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திரிணாமூல் காங்கிரஸ் புகார் அளித்ததைத் தொடர்ந்து, இந்திய தேர்தல் ஆணையம் மேற்கு வங்க மாநில தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் இதுதொடர்பாக அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை, கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில்  பயன்படுத்துவது தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை மீறுவதாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

திரிணாமூல் காங்கிரஸ் அளித்த புகாரை கவனத்தில் கொண்டு, இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய மேற்கு வங்க தலைமை தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டதுடன், இந்த புகார் குறித்து சுகாதார அமைச்சகத்திடமும் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது.

மத்திய அரசு விளம்பரங்களில் பிரதமரின் படங்கள் – 72 மணி நேரத்தில் அகற்ற தேர்தல் ஆணையம் உத்தரவு

“முதலில் உண்மைகளை தெரிந்து கொள்ள விரும்புகிறோம். உதாரணமாக சொல்வதானால், இந்த கொரோனா தடுப்பூசி சான்றிதழ்கள் உண்மையிலேயே சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் படிதான் வழங்கப்படுகின்றனவா? தொடர்ந்து நடக்கும் இதுபோன்ற விஷயங்களில், சம்பந்தப்பட்ட அனைத்து அதிகார பூர்வ தரப்பினரிடமிருந்தும் நாங்கள் பதிலை எதிர்பார்கிறோம்.” என்று தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்