மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் உள்ள கோவிலை இடித்து 2 தர்காக்கள் கட்டப்பட்டுள்ள நிலங்களை மீட்க வேண்டும் என்று மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
நவநிர்மாண் சேனா கட்சி சார்பில் புன்யேஷ்வர் முக்தி (கோவில் நிலங்களை மீட்கும் யாத்திரை) தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கட்சியின் பொதுச் செயலாளர் அஜய் ஷிண்டே, கோவில் நிலங்களை மீட்பதற்காக ராஜ் தாக்கரே தலைமையில் நடைபெறும் போராட்டத்திற்கு மக்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கியான்வாபி மசூதியில் நடத்தைப்பட்ட ஆய்வை மேற்கோள் காட்டிய அவர், இந்துத்துவா மீதான ராஜ் தாக்கரேவின் நிலைப்பாட்டை அடுத்து அரசாங்கம் விழித்துக் கொள்ளத் தொடங்கியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
கியான்வாபியை போல புனேவில் உள்ள புண்யேஷ்வர் கோவிலுக்காக போராடுகிறோம்.
புனேவில் உள்ள புண்யேஷ்வர் மற்றும் நாராயணேஷ்வர் கோவில்கள் கில்ஜி வம்சத்தின் ஆட்சியாளரான அலாவுதீன் கில்ஜியின் தளபதியால் இடிப்பட்டது. பின்னர் அந்த இடத்தில் தர்கா கட்டப்பட்டது என்று ஷிண்டே கூறியுள்ளார்.
Source: The Telegraph India
LIC யை திட்டமிட்டு அழிக்கும் Nirmala Sitharaman | LIC Senthil Kumar Interview | LIC IPO | Share
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.