Aran Sei

பாலியல்வன்கொடுமை : “உடனடி நடவடிக்கை வேண்டும்” – உள்துறை அமைச்சகம்

Image Credits: Crosol

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் காவல்துறையினர் கட்டாய நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்வதற்காக மாநிலங்களுக்கும் மற்றும் மத்திய பிரதேசங்களுக்கும் உள்துறை அமைச்சகம் ஆலோசனை வழங்கியுள்ளது.

குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1973 (சிஆர்பிசி) இன் பிரிவு 154-ன் உட்பிரிவு (1) இன் கீழ் எந்தக் குற்றம் நடைபெற்றாலும் எஃப்.ஐ.ஆர் கட்டாயமாகப் பதிவு செய்யப்பட வேண்டும் என்று இந்தியாவின் மாநில அரசுகளுக்கு அரசாங்கத்தின் துணைச் செயலாளர் பவன் மேத்தா எழுதிய கடிதம் குறிப்பிடுகிறது.

புலனாய்வு செய்யக்கூடிய குற்றத்தின் தகவல்களைப் பெற்றால், முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) அல்லது ஒரு “ஜீரோ எஃப்ஐஆர்-ஐ” (காவல் நிலையத்தின் எல்லைக்கு வெளியே குற்றம் நடந்தால்) பதிவுசெய்யவும் இந்தச் சட்டம் உதவுகிறது. பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்குகள் இதில் அடங்கும் என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்

“சட்டத்தில் கடுமையான விதிகளும் பல திறன் மேம்பாட்டு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இதனை காவல்துறையினர் கடைப்பிடிக்கத் தவறிவிட்டால், நாட்டில், குறிப்பாக பெண்கள் பாதுகாப்பு தொடர்பான குற்றவியல் நீதி வழங்கப்படுவதற்கு இது பெரிதாக உதவாது,” என்று மாநிலங்களுக்கான ஆலோசனையில் கூறப்பட்டுள்ளது.

Image Credits: ANI
Image Credits: ANI

 

“இதுபோன்ற குறைபாடுகள் கண்டறியப்பட்டால், விசாரிக்கப்பட்டு அதற்குக் காரணமான அதிகாரிகளுக்கு எதிராக உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Image Credits: ANI
Image Credits: ANI

“பாலியல் வன்கொடுமை வழக்குகள் உட்பட, பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் எஃப்ஐஆர் பதிவு உள்ளிட்ட காவல்துறையினர் எடுக்க வேண்டிய கடுமையான நடவடிக்கைகளை வலியுறுத்தி இந்திய அரசு அவ்வப்போது மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்குப் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளது,” என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Image Credits: ANI
Image Credits: ANI

அதன்படி, எஃப்ஐஆர் பதிவு செய்தல், தடயவியல் பரிசோதனைக்காக ஆதரவுகளை சேகரித்தல், பாலியல் வன்கொடுமை சான்றுகள் சேகரிப்பு (SAEC) கிட் பயன்படுத்துதல் இரண்டு மாதங்களில் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் விசாரணை முடித்தல், பாலியல் குற்றவாளிகள் மீதான தேசிய தரவுத்தளத்தைப் பயன்படுத்துதல், மீண்டும் மீண்டும் பாலியல் குற்றவாளிகளைக் கண்டறிந்து கண்காணித்தல் போன்றவற்றைப் பின்பற்ற வேண்டும், என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிப்படையாக அறியக்கூடிய குற்றங்கள் தொடர்பாக ஒரு அதிகாரி எஃப்ஐஆர் தாக்கல் செய்யத் தவறினால் அவருக்குத் தண்டனை விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

“பிரிவு 326 ஏ, பிரிவு 326 பி, பிரிவு 354, பிரிவு 354 பி, பிரிவு 370, பிரிவு 370 ஏ, பிரிவு 376, பிரிவு 376 ஏ, பிரிவு 376 ஏபி, பிரிவு 376 பி, பிரிவு 376 சி, பிரிவு 376 டி, பிரிவு 376 டிஏ, பிரிவு 376 டிபி, பிரிவு 376 இ அல்லது ஐபிசி பிரிவு 509-ன் கீழ் கீழ் தண்டிக்கப்படக்கூடிய வெளிப்படையான குற்றங்கள் தொடர்பாக எஃப்ஐஆர் பதிவு செய்யத் தவறும் ஒரு பொது ஊழியருக்கு இந்திய தண்டனைச் சட்டம் 1860 (ஐபிசி) இன் பிரிவு 166 ஏ (சி)-ன் கீழ் தண்டனை வழங்கலாம்,” என்பதும் இந்த ஆலோசனையில் கூறப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்