Aran Sei

’புலம்பெயர் தொழிலாளர்களின் கணக்கெடுப்பு வரும் மார்ச் மாதம் தொடங்கும்’ – மத்திய அரசு அறிவிப்பு

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், வீட்டுப் பணியாளர்கள், தொழில்துறை வல்லுநர்களாலும் போக்குவரத்துத் துறையாலும் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் தொடர்பாக நான்கு தனித்தனி கணக்கெடுப்புகள் நடத்தப்படவுள்ளதாக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்படும் இந்த ஆய்வு, அக்டோபர் மாதத்திற்குள் நிறைவடையும் என்றும் கூறப்பட்டுள்ளது.

புதிய தொழிலாளர் நலச் சட்டங்கள்: சீர்த்திருத்தமா? சீர்கேடா? – விரிவான அலசல்

நேற்று (டிசம்பர் 30), தொழிலாளர் பணியகத்தின் நூற்றாண்டு விழாவின் போது, சிறப்பு தபால் முத்திரையை வெளியிடப்பட்டுள்ளது. அப்போது, பேசிய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் சந்தோஷ்குமார் கங்வார், “ தொழிலாளர் பணியகம்தான் இந்த நான்கு கணக்கெடுப்புகளை மேற்கொள்ளவுள்ளது.” என்று அறிவித்துள்ளார் என்று தி இந்து தெரிவித்துள்ளது.

நிறுவனங்களின் முதல் காலாண்டு வேலைவாய்ப்பு கணக்கெடுப்புகளை தொழிலாளர் பணியகம் நடத்தியுள்ளது என்றும் அவை விரைவில் மீண்டும் புதிய வடிவத்தில் தொடங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தொழிலாளர் நலனை நசுக்கும் மத்திய அரசு – மே 17 இயக்கம்

“அகில இந்திய அளவில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், வீட்டுப் பணியாளர்கள், தொழில்துறை வல்லுநர்களாலும் போக்குவரத்துத் துறையாலும் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் தொடர்பாக நான்கு தனித்தனி கணக்கெடுப்புகள் நடத்தப்படவுள்ளது. இந்த பணிகள், தொழிலாளர் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.  இவை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்டு, அக்டோபர் மாதத்திற்குள் நிறைவடைகிறது.” என்று தெரிவித்துள்ளதாக தி இந்து கூறியுள்ளது.

மேலும், தொழிலாளர்கள் கொள்கைகளை வகுப்பதற்கு,  அமைப்புசாரா துறைகள் உட்பட அனைத்து ஒழுங்கமைக்கப்பட்ட துறைகளிலும் உள்ள  வேலைவாய்ப்புகள் குறித்த உண்மையான தகவல்கள் தேவை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

உரிமைகளைப் பறிக்கும் தொழிலாளர் சட்ட திருத்தங்கள் : ஷியாம் சுந்தர்

அதைத்தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி பேசிய காணொளி விழாவில்  ஒளிப்பரப்பப்பட்டுள்ளது. அதில், ”மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட நான்கு தொழிலாளர்கள் சட்டங்களும், தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்கும். மேலும், நாட்டின் உற்பத்தித்திறனை அதிகரிக்கும்.” என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்