கொரோனா ஊரடங்கின்போது கடந்த ஆண்டு மே மாதம் மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் அருகே தண்டவாளத்தில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது ரயில் ஏறியதில், மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 16 புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவம் நடைபெற்று 10 மாதங்கள் ஆகியும் இன்னும் இறப்பு சான்றிதழ் கிடைக்காததால் அவரது குடும்பத்தினர் தவித்து வருகின்றனர்.
இறப்பு சான்றிதழ் வேண்டி ஜெய்சிங் நகர் நீதிமன்றத்தின் அப்போதைய துணை அமர்வு நீதிபதியை அணுகியபோது, அவர் விபத்து நடைபெற்ற அவுரங்காபாத் அதிகாரிகளால் மட்டுமே வழங்க முடியும் என தெரிவித்ததாக இறந்தவர்களின் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
”அவுரங்காபாத் நிர்வாகத்திற்கு இதுவரை இரண்டு முறை கடிதம் எழுதியுள்ளோம்” என கூறியுள்ள துணை அமர்வு நீதிபதி திலிப் பாண்டே, இறப்பு சான்றிதழ் வழங்க இவ்வளவு காலதாமதம் ஏன் ஏற்படுகிறது எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த விபத்தில் சுனிதா சிங், சந்திரவதி, பார்வதி சிங் அகிய மூவரும் தங்கள் கணவன்களை இழந்துள்ளனர். கஜ்ராஜ் சிங் தனது இரு மகன்களை இழந்துள்ளார்.
இறப்பு சான்றிதழ் இல்லாமல் இறந்தவர்களை வங்கி கணக்கை அணுகவோ, விதவைகள் ஓய்வுதியம் போன்ற சமூக நல உதவிகளைப் பெறவோ முடியாமல் அவர்களின் குடும்பத்தினர் தவித்து வருகின்றனர்.
Source : The Telegraph Online
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.