கடந்த நவம்பர் மாதம், மக்கள் ஜனநாயகக் கட்சியின் இளைஞரணித் தலைவர் வாஹித் பர்ராவை பயங்கரவாத வழக்கில் தொடர்பு இருப்பதாகக் குற்றம்சாட்டி, தேசியப் புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கைது செய்து திகார் சிறையில் அடைத்தது.
கைது செய்யப்படுவதற்கு முதல் நாள், காஷ்மீர் மாவட்ட மேம்பாட்டு கவுன்சில் தேர்தலில், மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பாக, புல்வாமா தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.
காஷ்மீர் : `நாங்கள் மீண்டும் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளோம்’ – மெஹ்பூபா முப்தி
இதைத்தொடர்ந்து, வாஹித் பர்ராவின் குடும்பத்தைக் காண மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெஹபூபா முப்தி முயன்ற போது, அவரை காஷ்மீர் நிர்வாகம் வீட்டு சிறையில் வைத்தது.
தற்போது, வீட்டுசிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் மெஹபூபா முப்தி, மீண்டும் வாஹித் பர்ராவின் குடும்பத்தைக் காண முயன்றதாகவும், அவர் தொடர்ந்து தடுக்கப்பட்டு வருவதாகவும் மெஹபூபா குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாவட்ட மேம்பாட்டு கவுன்சில் தேர்தல் – உண்மையில் வெற்றி பெற்றது யார்?
இந்நிலையில், நேற்று (ஜனவரி 3) ஒருங்கிணைந்த ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெஹபூபா முப்தி, ஸ்ரீநகரில் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.
அப்போது, “வாஹீத் பர்ரா ஒரு மிகச்சிறந்த ஜனநாயகவாதி. காஷ்மீரில் நூற்றுக்கணக்கான இளைஞர்களை ஜனநாயகப் பாதைக்கு மாற்றி இருக்கிறார். மக்கள் ஜனநாயகக் கட்சியினரையும் என்னையும் அச்சுறுத்த வேண்டும் என்பதற்காகவே இதுபோன்ற கைது நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.” என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளதாக தி இந்து தெரிவித்துள்ளது.
பெல்லட் குண்டுகளும், காஷ்மீர் இளைஞர்களின் இருண்டு போன வாழ்க்கையும்
கடந்த இரண்டு ஆண்டுகளாக என்னுடைய வங்கிக் கணக்குகளையும், என்னுடைய அரசு ஆவணங்களையும் விசாரணை அமைப்புகள் ஆய்வு செய்து வருகின்றன என்றும் என்னுடைய தந்தையின் (முப்தி முகமது சயீது) நினைவிடம் தொடர்பாககூட அவர்கள் விசாரித்து வருகிறார் என்றும் மெஹபூபா முப்தி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “இந்த மிரட்டல்கள் மூலம் என்னை பணிய வைக்க பாஜக நினைக்கிறது. ஆனால் அது ஒருபோதும் நடக்காது.” என்று அவர் கூறியுள்ளதாக தி இந்து தெரிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் – ” மாவட்ட கவுன்சிலர்களிடம் பாஜக குதிரை பேரம் “
வாஹித் பர்ரா, தனது புல்வாமா தொகுதியில் மிகப்பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.