ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் 280 இடங்களுக்கு மாவட்ட மேம்பாட்டு கவுன்சில் தேர்தலும் (டிடிசி), 13,400 பஞ்சாயத்துகள் மற்றும் காலியாக இருக்கிற நகர்ப்புற உள்ளாட்சிப் பொறுப்புகளுக்கு இடைத்தேர்லும் 8 கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது.
மாவட்ட மேம்பாட்டு கவுன்சில் தேர்தல் நிறைவடைந்து இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது.
காஷ்மீர் : `நோயாளிகளின் உயிரோடு விளையாடும் தொடர் மின்வெட்டுகள்’
இந்நிலையில் மெஹ்பூபா முஃப்தியின் மக்கள் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் சர்தாஜ் மத்னி, மன்சூர் ஹுசைன், நயீம் அக்தர் ஆகியோர் எந்தக் காரணமுமின்றி நேற்று காவல்துறையால் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை தடுப்புக் காவலில் வைக்க மேலிடத்தில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக மூத்த காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர் என மெஹ்பூபா முஃப்தி தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Total lawlessness as PDPs Sartaj Madni & Mansoor Hussain have been arbitrarily detained today on the eve of DDC election results. Every senior police officer here is clueless as it is ‘upar say order’. No rule of law in J&K anymore. It is out & out Gunda Raj.
— Mehbooba Mufti (@MehboobaMufti) December 21, 2020
”ஜம்மு காஷ்மீரில் நடப்பது சட்டத்தின் ஆட்சியில்லை குண்டர்களின் ஆட்சி , ஜனநாயக படுகொலை நடக்கிறது” எனவும் மெஹ்பூபா குறிப்பிட்டுள்ளார்.
J&K admin is on an arrest spree today. PDPs Nayeem Akhtar too has been abducted by J&K police & is being taken to MLA hostel. Looks like BJP is planning to manipulate DDC results tomorrow & don’t want any resistance. Democracy is being murdered in J&K.@manojsinha_ @JmuKmrPolice
— Mehbooba Mufti (@MehboobaMufti) December 21, 2020
மாவட்ட மேம்பாட்டு கவுன்சில் தேர்தல் முடிவுகளில் மோசடி செய்ய பாஜக திட்டமிட்டுள்ளது. இதை யாரும் எதிர்க்கக் கூடாது என்பதற்காகவே இந்த கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று மெஹ்பூபா முஃப்தி குற்றம் சாட்டியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் : மீண்டும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள மெஹ்பூபா முப்தி
முன்னதாக, மாவட்ட மேம்பாட்டு கவுன்சில் தேர்தலைச் சீர்குலைக்கத் தீவிரவாதிகளும் பிரிவினைவாதிகளும் முயற்சி செய்ய இருப்பதாக கூறி ஜம்மு காஷ்மீர் நிர்வாக இணைய வசதிகளை முடக்கியது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் பன்முகத்தன்மையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கவும் சட்ட ஒழுங்கைப் பாதுகாக்கவும் 4ஜி இணையத்தை முடக்கியதாக அரசு காரணம் கூறியது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.