Aran Sei

மருந்துக் கடை முதல் சலவை இயந்திரம் வரை – விவசாயிகளின் போராட்டக் களம்

விவசாய சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள், தங்களின் தேவைகளுக்காக, பல் மருத்துவமனை முகாம்,  மருந்துக் கடைகள், நூலகங்கள், துணி சலவை நிலையங்கள், கோவில் போன்ற ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

டெல்லி எல்லையில் உள்ள சிங்கு பகுதியில், கடுமையான குளிருக்கு மத்தியிலும், தொடர்ந்து விவசாயிகளின் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

லூதியானாவைச் சேர்ந்த சந்து என்ற விவசாயி போராட்டக்காரர்களுக்காக, குறிப்பாக முதியவர்களுக்காக இரண்டு சலவை இயந்திரங்களை கொண்டு வந்துள்ளார்.

மத்திய அரசு விவசாயிகளுக்கு அளித்த திட்ட வரைவில் இருந்தது என்ன? – விரிவான விளக்கம்

“நாங்கள் ஒரு வாரத்திற்கும் மேலாக இங்கு இருக்கிறோம். இங்கு மிகவும் குளிராக இருக்கிறது. ஆனால், எங்களிடம் நிறைய ஆடைகள் இல்லை. பல முதியவர்கள் நடைபாதைகளில் துணி துவைப்பதைக் கண்டேன். எனவே நான் வீட்டிற்குச் சென்று இரண்டு சலவை இயந்திரங்களை எடுத்து வந்தேன்.” என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், “எல்லோரும் அதைப் பயன்படுத்தக்கூடிய வகையில் அவற்றை பொதுவில் வைத்திருக்கிறோம். நிறைய பேர் இங்கு வந்து தங்கள் ஆடைகளைத் சலவை செய்கிறார்கள். இந்த இயந்திரங்களில் துணிகளை உலர்த்துவதற்கான வசதியும் இருக்கிறது. அதனால், விவசாயிகள் தங்கள் உடைகள் உலரும் வரை நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதில்லை.” என்று சந்து சுட்டிக்காட்டியுள்ளார்.

எல்லாவற்றையும் சந்தை செய்யும் என்றால் அரசு எதற்கு? : வீடியோ

அவரது நண்பர் அமன்பிரீத் உடன் சேர்ந்து, ஒரு நாளைக்கு 500-க்கும் மேற்பட்ட துணிகளை சலவை செய்கிறார். ட்ராக்டர்கள் மற்றும் லாரிகளில் இருக்கும் மின்கலன்கள் மூலமும் ஜெனரேட்டர்கள் மூலமும்  இவை இயக்கப்படுகின்றன என்று அமன்பிரீத் குறிப்பிட்டுள்ளார்

சில விவசாயிகள் தொலைபேசிகளையும் விளக்குகளையும் சார்ஜ் செய்ய, தங்கள் லாரிகளில் சூரிய மின்சக்தி தகடுகளை பதிந்துள்ளனர். ஹரியானா மாநிலம் கர்னாலில் இருந்து இரண்டு சூரிய மின்சக்தி தகடுகளைக் கொண்டுவந்துள்ள குர்பிந்தர் சிங், “நாங்கள் முக்கியமாக பல்புகளை சார்ஜ் செய்ய இந்த சூரிய மின்சாரத்தை பயன்படுத்துகிறோம். ஏனென்றால், சாப்பாட்டு பந்திகள் பின் இரவு வரை நடக்கின்றன.” என்று கூறியதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக திருத்த மசோதா: பஞ்சாபைத் தொடரும் சத்தீஸ்கர்

மேலும், சாப்பாட்டு பந்தியில் சப்பாத்தி தயாரிக்கும் இயந்திரங்கள் உள்ளன. அவை ஒரு மணி நேரத்தில் 1,000 க்கும் மேற்பட்ட சப்பாத்திகளை தயாரிக்கிறது. விவசாயிகள் இயந்திரத்தின் உள்ளே மாவு உருண்டைகளை  வைத்தால், சப்பாத்தி 5-10 நிமிடங்களில் கிடைத்துவிடும். இது லாரிகளில் உள்ள மின்கலன்களாலும் சூரிய மின்சக்தி தகடுகளாலும் இயக்கப்படுகிறது என்று விவசாயிகள்  குறிப்பிட்டுள்ளனர்.

நன்றி : ED Times

அங்கு 10 க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்களும் மருத்து கடைகளும் உள்ளன. பேருந்து ஒன்றின் உள்ளே ஒரு பல் மருத்துவ முகாம் செயல்படுகிறது.  இதில் எக்ஸ்ரே இயந்திரம் உட்பட பிற மருத்துவ உபகரணங்களும் உள்ளன. தனது இரண்டு மாணவர்களுடன் முகாமை நடத்தி வரும் மொஹாலியைச் சேர்ந்த டாக்டர் சன்னி அலுவாலியா, ஒரு நாளைக்கு 100 க்கும் மேற்பட்டவர்களுக்கு  சிகிச்சை அளிப்பதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸில் பதிவு செய்துள்ளார்.

காய்கறிகளுக்கு அடிப்படை விலையை நிர்ணயித்த கேரள அரசு

பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த பல மாணவர்கள், போராடும் தங்கள் விவசாய குடும்பங்களை ஆதரிப்பதற்கும் மற்ற விவசாயிகளுக்கு உதவுவதற்கும் இந்த போராட்டத்தில் இணைந்துள்ளனர்.

ஜஸ்வீர் சிங் என்ற ஆராய்ச்சி மாணவர்,  மதம், ஆன்மீகம், புனைவு கதைகள் மற்றும் இந்திய சட்டங்கள் குறித்த 500 க்கும் மேற்பட்ட புத்தகங்களுடன் ஒரு சிறிய நூலகத்தை அங்கே திறந்துள்ளார்.

விவசாய சட்டங்கள் பெரும் குழப்பத்தை தோற்றுவிக்கும் – பி சாய்நாத்

”போராடும் மக்கள் இங்கு எதையும் செய்யாமல் சும்மா இருப்பதை நான் விரும்பவில்லை. ஒவ்வொரு நாளும் 80 முதல் 90 வாசகர்கள் புத்தகங்களை படிக்கின்றனர். மக்கள் பலவற்றைக் கற்றுக் கொண்டு வளர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இந்த பயிற்சி அவர்களின் இந்த வறுமை நிலைமையையும் உரிமைகளையும் அவர்களுக்கு நன்கு புரிய வைக்க உதவும்.” என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்