Aran Sei

மதுராவில் கோவிலை ஒட்டிய மசூதியை அகற்ற வேண்டும் : நீதிமன்றத்தில் மனு

credits : pti

துராவில் அமைந்துள்ள மசூதியை அகற்றக்கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படும் என வருகின்ற சனிக்கிழமை தெரிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கிருஷ்ணர் பிறந்ததாகக் கூறப்படும் இடமும், கிருஷ்ண ஜென்ம பூமி என அழைக்கப்படும் மதுரா கோவிலை (கேசவ தேவ கோயில்), ஸ்ரீ கிருஷ்ணா ஜென்மஸ்தான் சேவா சன்ஸ்தானும், அதன் அருகிலுள்ள மசூதியை (ஷாஹி இத்கா மசூதி) ஷாஹி மஸ்ஜித் இத்கா மேலாண்மை கமிட்டியும் நிர்வகித்து வருகின்றன.

இவ்விரண்டிற்கும் இடையே கடந்த 1968-ம் ஆண்டில் ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாக, கோவிலும், மசூதியும் மதநல்லிணக்கத்தை போற்றும் வகையில் அருகருகில் அமைந்திருக்க வேண்டும் என்பது உறுதி செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தம், மதுரா மாவட்ட சிவில் நீதிமன்றத்தால் ஏற்கப்பட்டு, தற்போது செயல்பாட்டில் இருந்து வருகிறது.

ராமர் கோவிலுக்காக காங்கிரஸ் நிதி திரட்டல் – காட்டுப்பகுதியில் மணற்கல் எடுப்பதற்கு ராஜஸ்தான் அரசு அனுமதி

கடந்த பிப்ரவரி 2-ம் தேதி, மதுராவின் கேசவ தேவ கோயிலின் பூசாரி பவண் குமார் சாஸ்திரி 1968-ம் ஆண்டில் போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரியும், மசூதி அமைந்துள்ள 13.37 ஏக்கர் நிலத்தையும் தன்னிடமே ஒப்படைக்கக் கோரியும் மதுரா சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

ராமர் கோயில் கட்டுவதற்கான நிதி திரட்டல் – டெல்லியில் நன்கொடை பேரணியை துவங்கிய பாஜகவினர்

அந்த மனுவில், கோயில் மற்றும் மசூதி அமைந்துள்ள 13.37 ஏக்கர் நிலம் தன்னுடைய மூதாதையருக்குச் சொந்தமானது என்றும் 1968-ம் ஆண்டும் ஒப்பந்தத்தை ரத்து செய்து, அந்த முழு நிலத்தையும் தன்னிடமே வழங்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், ஷாஹி மஸ்ஜித் இத்கா மேலாண்மை கமிட்டி, கிருஷ்ண ஜென்ம பூமியில் அமைந்திருக்கும் மசூதியை குறிப்பிட்ட நேரத்திற்குள் அகற்ற வேண்டும் என்றும் மனுவில் தெரிவித்துள்ளார்.

குடியரசு தின அணிவகுப்பில் ராமர் கோவிலுக்கு முதல் பரிசு – பாதுகாப்புத்துறை அறிவிப்பு

இந்நிலையில், இந்த வழக்கு கூடுதல் மாவட்ட நீதிபதி தேவ் காந்த் ஷுக்லா முன்னிலையில் விசாரணைக்கு வந்துள்ளது. இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வது தொடர்பாக வருகின்ற சனிக்கிழமை அறிவிக்கப்படும் என கூறியுள்ளார்.

கலவரம் நடைபெற்ற பகுதியில் ராமர் கோவில் கட்ட நிதி வசூல் – டெல்லி பாஜக திட்டம்

மதுராவில் அமைந்துள்ள மசூதியை அகற்றக்கோரி இந்து மற்றும் வலதுசாரி அமைப்புகள் பல்வேறு வழக்குகளை தாக்கல் செய்தாலும் மதுரா சிவில் நீதிமன்றம் பெரும்பாலான மனுக்களை தள்ளுபடி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

sources : pti

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்