Aran Sei

`பழங்குடியின மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்தால் மாவோயிஸ்டா?’ – பள்ளி ஆசிரியைக் கைது

credits : the wire

ந்திர பிரதேசத்தில் பள்ளி ஆசிரியை உட்பட 67 பேர் மீது சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் 2-ம் தேதி, தட்வை காவல்துறையினர், சண்டிகரில் இருக்கும் முதன்மை மாவோயிஸ்ட் தலைவர்களை சந்திக்க சென்று கொண்டிருந்த போது, மாவோயிஸ்ட் ஆதராவாளர்கள் என சந்தேகிக்கப்பட்ட ஹரிபூஷன், தாமோதர், கங்கனாலா ராஜி ரெட்டி , மைலரபு அதெலு ஆகிய நான்கு நபர்களை கைது செய்து விசாரித்துள்ளனர்.

இதையடுத்து காவல்துறை கண்காணிப்பாளர் பி.சைத்தன்யா நடத்திய பத்திரிக்கையாளர் சந்தித்தார். அந்தச் சந்திப்பில் ஆந்திராவில் உள்ள பல நபர்களுக்கு மாவோயிஸ்டுகளுடன் தொடர்புள்ளதாக கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் கூறியதாக தெரிவித்துள்ளார்.

பீகார் : மூன்று மாவோயிஸ்டுகள் என்கவுண்ட்டரில் கொலை

இந்நிலையில் தெலுங்கானாவின் அதிலாபாத் மாவட்டத்தில் இருக்கும் அரசுப்பள்ளியில் வேலை செய்து வரும் 38 வயதான அத்ரம் சுகுணா, பழங்குடியின நல உறைவிடப் பள்ளியில் ஆசிரியராக இருக்கும் சுகுணாவின் கணவர் புஜங்கா ராவ், , சுகுணாவின் சகோதரர் கே வெங்கடேஷ் (இவர்கள் அனைவரும் கோண்ட் இனத்தைச் சேர்ந்த பழங்குடி மக்கள்) மற்றும் பழங்குடியின மக்கள் நலனுக்காக செயல்படும் பிற அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் மீது சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

இது குறித்து பேசிய சுகுணாவும், புஜங்காவும் தங்களுக்கு மாவோயிஸ்டுகளோடு எந்தத் தொடர்பும் இல்லை என மறுத்துள்ளனர். புஜங்கா மனித உரிமைகள் அமைப்பின் மாநில துணை தலைவர். சுகுணாவோ, அதே அமைப்பின் அதிலாபாத் மாவட்டத் தலைவர். “பழங்குடியின மக்களின் உரிமைகளை காக்கவும், பழங்குடியின பகுதியின் சுகதாரத்தை மேம்படுத்தவும், தண்ணீர் வசதிக்காகவும், போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தவும் மட்டும் தான் நாங்கள் வேலை செய்கிறோம்” என்று கூறியுள்ளனர்.

credits : the wire
credits : the wire

அதிலாபாத் மாவட்ட கல்வி அலுவலகத்தில் இருந்து விசாரணை நடத்தப்படவிருக்கிறது, அதில் பங்கேற்று நிரபராதி என்று நிரூபிக்க வேண்டுமென சுகுணாவிற்கு தகவல் வந்துள்ளது.

நவம்பர் 22 மற்றும் 24-ம் தேதிகளில், மனித உரிமை அமைப்புகள், மகளிர் அமைப்புகள், இலக்கியம் மற்றும் தலித் அமைப்புகளை சேர்ந்த 67 செயற்பாட்டாளர்கள் மீது ஆந்திர காவல்துறையில் சட்ட விரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவின் மனித உரிமை அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் வி.எஸ்.கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதில் மூன்று வழக்குகளில் மாவோயிஸ்டுகளுடன் தொடர்பிருப்பதாக புகார் அளித்திருப்பது காவல்துறையின் ஆய்வாளர்கள், அவர்களுக்கு சாட்சியங்களாக இருந்தது கான்ஸ்டபிள்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து மனித உரிமைகள் அறக்கட்டளையின் தலைவர் வி எஸ் கிருஷ்ணா, விசாகப்பட்டினத்தின் வகபள்ளியில் நடந்த பாலியல் வன்கொடுமையை வெளியில் கொண்டு வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க மனித உரிமைகள் அறக்கட்டளை செயல்பட்டதால் மட்டுமே தாங்கள் குறி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

“நக்சலைட்டுகள் என்ற பெயரில் யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம்” – சத்தீஸ்கர் முதல்வர்

விசாகப்பட்டினத்தின் வகபள்ளியில் இருக்கும் ஆதிவாசி மக்கள் குடியிருப்பை சேர்ந்த கோண்ட் இனப் பெண்களில் 11 பேர், 2007-ம் ஆண்டு ஆகஸ்ட் 10 அன்று, ஆந்திராவின் மாவோயிஸ்ட் எதிர்ப்பு படையான கிரே ஹவுண்ட்ஸின் அதிகாரிகளால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக சொல்லப்படுகிறது. பாதிக்கப்பட்டோருக்கு மனித உரிமைகள் அறக்கட்டளை சட்ட உதவிகளை வழங்கி, இந்த வழக்கு விசாரிக்கப்படுவதை உறுதி செய்தது. “இதனால் தான் காவல்துறை செயற்பாட்டாளர்களுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்து, பயமுறுத்தி, பழங்குடியின மக்களிடம் இருந்து அவர்களை விரட்டப் பார்க்கிறது” என்று வி எஸ் கிருஷ்ணா கூறியுள்ளார்.

credits : the wire
credits : the wire

மாவோயிஸ்டுகளுடன் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்ற சுகுணாவின் தம்பி கிருஷ்ணா, மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் என கைது செய்யப்பட்டிருப்பவர்கள் இப்படிச் சொன்னார்கள் என்பதை கேட்டதும் அதிர்ச்சியடைந்ததாக கூறியுள்ளார்.

“பழங்குடியினத்தை சேர்ந்த நான் என் மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கிறேன். இது எப்படி இடது சாரி பயங்கரவாத நடவடிக்கையாகும்?” என்று சுகுணா கேள்வியெழுப்பியுள்ளார்.

அரசின் கடுமையான நடவடிக்கைகளுக்கு எதிராக எழும் ஜனநாயக குரல்களை அடக்கவே சட்ட விரோத செயல்கள் தடுப்புச் சட்டம் போன்றவை கையில் எடுக்கப்படுகின்றன என்கிறது மனித உரிமை குழுக்கள்.

மாவோயிஸ்ட் கொலை : ’போலி எண்கவுண்டர் என சந்தேகமாகவுள்ளது’-குடும்பத்தினர்

புரட்சி எழுத்தாளர்கள் சங்கத் தலைவர் தெலுங்கானாவை சேர்ந்த வரவர ராவ், சத்தீஸ்கரை சேர்ந்த தொழிலாளர் சங்க செயற்பாட்டாளர் மற்றும் வழக்கறிஞர் சுதா பரத்வாஜ், டெல்லி பல்கலைகழகத்தின் பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா ஆகியோர் தற்போது சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தி வயர் இணையதளத்தில் வெளியான செய்தியின் மொழியாக்கம்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்