Aran Sei

`குடியிருப்புப் பெயர்களில் சாதி நீக்கம்’ – மகாராஷ்ட்ரா அரசின் முற்போக்கான திட்டம்

காராஷ்ட்ராவில் உள்ள சாதி அடிப்படையிலான பெயர்களைக் கொண்ட குடியிருப்பு பகுதிகளுக்கு வேறு பெயர்கள் சூட்டப்படும் என்றும்  சாதியை படிப்படியாக ஒழிக்க மாநில அரசு விரும்புகிறது என்றும் அம்மாநில சமூக நீதித்துறை அமைச்சர் தனஞ்சய் முண்டே கூறியுள்ளார்.

நேற்று (டிசம்பர் 2) மகாராஷ்ட்ர மாநில அமைச்சரவை கூடியுள்ளது. அப்போது, மாநிலத்தில் ஜாதி அடிப்படையிலான பெயர்களைக் கொண்ட குடியிருப்பு பகுதிகளுக்கு மறுபெயரிடுவதற்கான திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது என்று பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

“இந்தியாவில், சாதி ஒழிப்பே பெண் விடுதலை ” – மீனா கந்தசாமி

இது குறித்து, முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், சமூக நல்லிணக்கத்தையும் தேசிய ஒருமைப்பாட்டையும் காப்பதற்காக, இந்தத் திட்டத்தை அரசு முன் வைத்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும், “’மஹர்-வாடா, போத்-வாடா, மங்-வாடா, தோர்-வஸ்தி, பிரம்மன்-வாடா மற்றும் மாலி-கல்லி’ போன்ற பெயர்கள் அந்த பகுதிகளில் வாழும் சமூகத்தை குறிக்கும் விதமாக உள்ளது. இது மகாராஷ்டிரா போன்ற முற்போக்கான மாநிலத்திற்கு சரியல்ல.” என்று சுட்டிக்காட்டியுள்ளது.

உள்ளாட்சிகளில் தொடரும் சாதியப் பாகுபாடு – புறக்கணிக்கப்படும் மக்கள் பிரதிநிதிகள்

“இந்த பெயர்கள் இறந்த விலங்குகளை அப்புறப்படுத்தும் சமூகமாகவும் தோட்டக்காரர்களாகவும் உள்ள தலித்துகள், பௌத்த தலித்துகள்  போன்றவர்களை குறிக்கின்றன” என்று நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

இனி இப்பெயர்கள் சமதா நகர், பீம் நகர், ஜோதிநகர், ஷாஹுநகர், கிரந்தி நகர் என்று மாற்றப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

சாதி பெயரைச் சொல்லித் திட்டுகிறார்கள் – ஊராட்சி மன்ற பெண் தலைவர்

இந்த நடவடிக்கை மக்களின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று மகாராஷ்டிரா சமூக நீதித்துறை அமைச்சர் தனஞ்சய் முண்டே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும், “நாங்கள் சாதி முறையை படிப்படியாக ஒழிக்க விரும்புகிறோம். எல்லாரும் கண்ணியத்துடன் வாழ உரிமை உண்டு. சாதி மற்றும் மதத்தின் பெயரால், யாரும் யாரையும் பாகுபாட்டோடு நடத்தக் கூடாது.” என்று கூறியுள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் மேற்கோளிட்டுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்