Aran Sei

மகா விகாஸ் கூட்டணியை உடைக்க நினைக்கும் முட்டாள் பாஜக : சாம்னா கடும் தாக்கு

credits : the indian express

சிவசேனா கட்சி சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் அவுரங்காபாத்தை சம்பாஜிநகர் என பெயர் மாற்றம் செய்ய கோரிக்கை விடுத்தது.
இந்தக் கோரிக்கையைடுத்து, 1995-ம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த அவுரங்காபாத்தின் மாநகராட்சி (ஏ.எம்.சி) பொதுக்குழு கூட்டத்தில் இது தொடர்பான திட்டம் நிறைவேற்றப்பட்டது. இதைக் கடுமையாக எதிர்த்த காங்கிரஸ் கட்சி இந்தத் திட்டத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்திலும் பின்னர் உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தது.

மஹாராஷ்ட்ரா : அமலாக்கத்துறை அலுவலகத்தில் “பாஜக மாநில அலுவலகம்” என்று பதாகை வைப்பு

இந்நிலையில் அவுரங்காபாத்தை சம்பாஜிநகர் என பெயர் மாற்றம் செய்யும் கோரிக்கை மகா விகாஸ் கூட்டணி (தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ், சிவசேனா) அரசாங்கத்தின் முன் வந்தால் அதைக் காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்க்கும் மகாராஷ்ட்ரா காங்கிரஸ் தலைவர் பாலாசாஹெப் தொராட் கூறியுள்ளார் என என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர் தொராட்டின் கருத்தைத் தொடர்ந்து இந்தப் பெயர் மாற்ற விவகாரத்தில் சிவசேனாவின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தக் கோரி பாஜக தொடர் அழுத்தும் கொடுக்க ஆரம்பித்துள்ளது.

பாஜக கூட்டணியில் குழப்பம்? : ராஷ்ட்ரிய ஜனதா தளத்தை பாஜக அழிப்பதாக குற்றச்சாட்டு

பாஜகவின் அழுத்தத்திற்கு பதிலளிக்கும் வகையில் சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் “அவுரங்காபாத்தை சம்பாஜிநகராக பெயர் மாற்றம் செய்யும் திட்டத்தை காங்கிரஸ் கட்சி எதிர்ப்பது பாஜகவை மகிழ்ச்சியடையச் செய்ததுள்ளது. ஆனால் இந்த முன்மொழிவுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிப்பது புதிதல்ல, எனவே இந்தச் சம்பவத்தை மகா விகாஸ் கூட்டணி அரசாங்கத்துடன் இணைப்பது முட்டாள்தனம்” என செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

`வீர சாவர்க்கருக்குப் பாரத ரத்னா வழங்காதது ஏன்?’ – சிவசேனா

மேலும் “அரசாங்க பதிவுகளில் பெயர் மாற்றப்படவில்லை என்றாலும், மாநிலத்தில் காங்கிரஸ் முதலமைச்சராக இருந்தபோதுதான் சிவசேனாவின் முன்னாள் தலைவர் பாலாசாகேப் தாக்கரே அவுரங்காபாத்தை சம்பாஜிநகர் என்று பெயர் மாற்றினார், மக்களும் அதை ஏற்றுக்கொண்டனர்” என்று சாம்னாவில் கூறப்பட்டுள்ளது.

சீக்கியர்களை நேசிக்கும் மோடி – அவர்களைப் போராட வைத்தது ஏன்? – சிவசேனா கேள்வி

மேலும் “ஆனால் சிலர் அவுரங்காபாத்தை பெயர் மாற்றம் செய்வது ஆளும் கூட்டணிக்குள் மோதலை உருவாக்கும் என்று நினைக்கிறார்கள்,” என சாம்னா பாஜகவை மீது மறைமுகமாக சாடியுள்ளது.

அலகாபாத்தின் பெயரை பிரயாகராஜ் என்றும், அயோத்தியின் பெயரை ஃபைசாபாத் என்றும் மாற்றிய பாஜக அவுரங்காபாத்தின் பெயரை சம்பாஜிநகர் என்று மாற்றாதது ஏன் என்று சாம்னா கேள்வியெழுப்பியுள்ளது.

’மத்திய அரசின் அதிகாரப்போக்கால், சோவியத் போல் இந்தியா சிதறும்’ – சிவசேனா எச்சரிக்கை

அவுரங்காபாத்தை பெயர் மாற்றம் செய்வது அரசியல் பிரச்சினை அல்ல என்று கூறியுள்ள சிவசேனாவின் சஞ்சய் ராவத் ”முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, பாலாசாகேப் தாக்கரே சம்பாஜிநகர் என்ற பெயரை அறிமுகம் செய்தார். இப்போது சில சட்ட ரீதியான வேலைகள் மட்டுமே எஞ்சியுள்ளன. மகா விகாஸ் கூட்டணி கட்சிகள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசும்போது, பிரச்சினைகள் சுமூகமாக தீர்க்கப்படும்” என்று தெரிவித்துள்ளார் என என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்