Aran Sei

ஸ்டெர்லைட்டிற்கு எதிராக போராடிய வழக்கறிஞரை உறுப்பினராக சேர்த்துக் கொள்ள வேண்டும் – பார் கவுன்சிலுக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்ட வழக்கறிஞர்களை மீண்டும் உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ளுமாறு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

பார் கவுன்சிலில் சேருவதற்கு விண்ணப்பித்த சிவா மீது 80க்கும் அதிகமான கிரிமினல் வழக்குகள் இருப்பது காவல்துறை சரி பார்ப்பில் தெரியவந்ததை தொடர்ந்து விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. ”நீதிமன்ற உத்தரவு இல்லாமல் அவரைச் சேர்த்துக்கொள்ள முடியாது என வாய்மொழியாக தெரிவிக்கப்பட்டது” என சிவா தன்னுடைய மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

பிஎம் கேர்ஸ் நிதிக்கும் இந்திய அரசுக்கும் தொடர்பில்லை – டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு பதில்

மனுவை விசாரித்த நீதிபதிகள் எம். துரைசாமி, கே. முரளி சங்கர் அடங்கிய அமர்வு, “பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம், அமைதியாக போராடுவதற்கான உரிமை ஆகியவை இந்திய அரசியலமைப்பின் கீழ் உத்திரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகள்” என தெரிவித்துள்ளனர்.

”அரசாங்கத்தின் கொள்கைகள்குறித்து கருத்து தெரிவிக்க ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு. அந்தக் கொள்கைகள்குறித்து அவர்கள் சொந்த கருத்துக்களை கொண்டிருக்க முடியும். மனுதாரர் அரசின் கொள்கைக்கு எதிராக குரல் எழுப்பும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளார்” என நீதிபதிகள் கூறியுள்ளனர்.

போதைப் பொருள் குற்றங்களை குறிப்பிட்ட மதத்துடன் இணைப்பது தவறானது – கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி காவல் கண்காணிப்பாளர்கள், திருநெல்வேலி காவல் ஆணையர் தாக்கல் செய்த அறிக்கைகளின்படி, அதில் தெரிவிக்கப்பட்டுள்ள வழக்குகளில் மனுதாரரின் பெயரில் இடம்பெற்றிருந்தாலும், முதல் தகவல் அறிக்கையில் அவரது பெயர் இல்லை என நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

”மனுதாரர் கொடுமையான குற்றம், சமூக விரோத குற்றம் மற்றும் மோசமான குற்றங்களில் ஈடுபட்டதாக எங்கும் கூறப்படவில்லை. இந்த வழக்குகள் விசாரணைக்காக சிபிஐக்கு அனுப்பப்பட்டுள்ளன. மனுதாரரின் பெயர் முதல் தகவல் அறிக்கையிலோ துணைக் குற்றப்பத்திரிக்கையிலோ சேர்க்கப்படவில்லை” என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தடுப்பில் சாதித்துவிட்டோமா ? – பிரதமர் மோடியின் உரைக்கு ரவிக்குமார் எம்.பி. எதிர்வினை

”சிபிஐயிடம் இருந்து எந்த அறிக்கையும் பெறாமல், காவல்துறை அறிக்கைகளை மட்டும் மாநில பார் கவுன்சில் எப்படி நம்பியிருக்கிறது என்பதை எங்களால் புரிந்து கொள்ளமுடியவில்லை. மேலும், எந்த விசாரணையும் மேற்கொள்ளாமல் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது” என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

சுற்றுசூழலை பாதுக்காக்க வேண்டியது மக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்று. ஒரு வழக்கில், மனுதாரர் சட்டக் கல்லூரி மாணவர்களுடன் சேர்ந்து பதாகைகளை ஏந்தியபடி கோஷங்களை எழுப்பியதாக கூறப்படுகிறது. இந்த எதிர்ப்பு அடிப்படை கடமையை நிறைவேற்றுவதை நோக்கியது” என நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

தாலிபான்களோடு ஆர்எஸ்எஸ்சை ஒப்பிட்ட கவிஞர் ஜாவேத் அக்தர் : மன்னிப்பு கேட்கக் கோரி நோட்டீஸ் அனுப்பிய வழக்கறிஞர்

மனுதாரரை வழக்கறிஞராக பதிவு செய்வதில் நீதிமன்றத்திற்கு எந்தத் தயக்கமும் இல்லை. அவரின் சேர்க்கை மறுக்கப்பட்டது அநீதியானது என்று கருதுவதாக தெரிவித்துள்ள நீதிபதிகள், சிவாவை பார் கவுன்சில் உறுப்பினராக சேர்த்துக் கொள்ளுமாறு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

Source : The Hindu

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்