Aran Sei

மத்தியபிரதேசம்: ராம நவமி ஊர்வலத்தில் கலவரம் – பாதிக்கப்பட்ட குடும்பங்கள் வீடுகளை விற்க முடிவு

த்தியபிரதேசத்தின் கர்கோன் நகரில் நடந்த ராம நவமி ஊர்வலத்தின் போது ஏற்பட்ட கல் வீச்சைத் தொடர்ந்து நடந்த கலவரத்தில் வாகனங்களும் வீடுகளும் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன.

மத்தியப் பிரதேசம்: ராம நவமி ஊர்வலத்தில் கலவரம் – வீடுகள், வாகனங்கள் எரிக்கப்பட்டதால் ஊரடங்கு உத்தரவிட்ட அரசு நிர்வாகம்

இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் இப்பகுதியில் தொடர்ந்து வகுப்புவாத வன்முறைகள் நடந்து வருவதால், இங்குள்ள இந்துக் குடும்பங்கள் கூட தங்களது வீடுகளை விற்று விட்டு வேறு இடங்களுக்குச் செல்லத் தயாராக உள்ளனர்.

கலவரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தங்களது வீட்டின் சுவர்களில் இந்த வீடு விற்பனைக்கென்று எழுதியுள்ளார்கள். இங்குள்ள பெரும்பாலான வீடுகள் பிரதமர் மோடியின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ளது.

ஜார்கண்ட் ராமநவமி ஊர்வலத்தில் கலவரம் – ஒருவர் உயிரிழப்பு; இணைய சேவை முடக்கம்

“1992 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை நான்கு முறை வகுப்புவாத வன்முறையின் போது எங்கள் வீடு தாக்கப்பட்டுள்ளது எங்களது சொத்துக்களை அதில் நாங்கள் இழந்தோம். மீண்டும் பழைய வாழ்க்கைக்குத் திரும்புவதற்குள் மீண்டும் மீண்டும் இங்குக் கலவரம் வெடிக்கிறது” என்று கலவரத்தில் பாதிக்கப்பட்டுள்ள ராகேஷ் காலே தெரிவித்துள்ளார்.

Source : NDTV

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்