உத்தர பிரதேசத்தில் கலப்பு (இந்து-முஸ்லிம்) திருமணம் செய்த தம்பதியினர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், அவர்கள் இருவரும் வயது வந்து திருமணம் செய்து கொண்டவர்கள் என்பதை நீருபிக்க தங்களுடைய பிறப்புச் சான்றிதழையும் இணைத்திருந்தனர். மேலும், இதில் இந்து பெண் அவருடைய கணவருடைய இஸ்லாமிய மதத்திற்கு விருப்பப்பட்டு மாறியுள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி சரல் ஸ்ரீவத்சவா அடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ” இரு வயது வந்த நபர்கள் ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள், அவர்களுடைய நிம்மதியான வாழ்க்கையில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை என்பதை நீதிமன்றம் பலமுறை வலியுறுத்தியுள்ளது” என்று பதிவு செய்துள்ளார் என லைவ் லா செய்தி வெளியிட்டுள்ளது.
” வயது வந்த பெண்ணுக்கு விருப்பப்படி வாழ உரிமை உள்ளது” – அலகாபாத் உயர்நீதிமன்றம்
இதையடுத்து, அலகாபாத் உயர் நீதிமன்றம், 2006-ம் ஆண்டு கலப்பு திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த குடும்பத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு அப்போதைய உச்ச நீதிமன்ற நீதிபதி ”மார்க்கண்டேய கட்ஜு”, வழங்கிய சிறப்பு வாய்ந்த தீர்ப்பை மேற்கோள் காட்டியுள்ளனர்.
யோகி ஆதித்யநாத்துக்கு எதிரான ட்வீட் : எஃப்ஐஆரை ரத்து செய்த அலகாபாத் உயர் நீதிமன்றம்
அந்த தீர்ப்பில் “இது ஒரு சுதந்திரமான ஜனநாயக நாடு. ஒரு நபர் வயது வந்த பின் அவன் அல்லது அவள் விரும்பும் எவரையும் திருமணம் செய்து கொள்ளலாம்.
அவர்களின் பெற்றோர் அத்தகைய சாதி அல்லது மதங்களுக்கு இடையிலான திருமணத்தை ஒப்புக் கொள்ளாவிட்டால், பெற்றோர்கள் அதிகபட்சமாக அவர்களுடைய மகன் அல்லது மகன் உடனான சமூக உறவுகளை துண்டித்துக் கொள்ளலாம்.
ஆனால், சாதி மதங்களை கடந்து திருமணம் செய்பவர்களுக்கு எதிராக வன்முறைகளை தூண்டுவது அச்சுறுத்தல்கள் கொடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட கூடாது” என்று அந்த தீர்ப்பை உயர் நீதிமன்றம் சுட்டிக் காட்டியது.
‘லவ் ஜிகாத் வழக்கு : நிரூபிக்க ஆதாரம் இல்லை’ – அலகாபாத் உயர் நீதிமன்றம்
இஸ்லாமிய இளைஞர்கள், இந்து பெண்களை திருமணம் செய்துகொள்வதற்கு உள்நோக்கம் கற்பிக்கும் சங் பரிவாரின் கூற்றான “லவ் ஜிகாத்தை” தடுப்பதற்காக உத்தர பிரதேசத்தில் சட்டவிரோத மதமாற்ற தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என தி வயர் குறிப்பிட்டுள்ளது.
தேசியப் பாதுகாப்புச் சட்டம் – தனி மனித உரிமைக்கு எதிராகச் செயல்படுகிறது – அலகாபாத் உயர் நீதிமன்றம்
இந்தச் சட்டத்தின் பல முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்படுவதும் போலியான கைதுகள் தொடர்ந்து நடப்பது வாடிக்கையாகிவிட்டது. அலகாபாத் உயர் நீதிமன்றம் 125 கலப்பு திருமணம் செய்த தம்பதியினருக்கு பாதுகாப்பு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.மேலும் சட்டவிரோத மதமாற்ற தடைச் சட்டத்திற்கு எதிரான பொது நல வழக்கை வருகின்ற ஜனவரி 15-ம் தேதி விசாரிக்க இருக்கிறது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.