Aran Sei

ராமர் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்தவர் – உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ்

pti

உத்தர பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் ”ராமர் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்தவர்” என செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேசம், அசம்கரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் ”சமாஜ்வாதி கட்சியின் தொண்டர்கள் அனைவரும் ராமர் மற்றும் கிருஷ்ண பக்தர்கள், ராமர் எங்கள் (சமாஜ்வாதி) கட்சியைச் சார்ந்தவர்” எனக் கூறியுள்ளார். அயோத்திக்கு விரைவில் குடும்பத்துடன் சென்று ராமரை வழிபட இருப்பதாகவும் கூறியுள்ளார்.

நடைமுறையில் இல்லாத 66ஏ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு – உத்தரப்பிரதேச அரசுக்கு நீதிமன்றம் கண்டனம்

உத்தரபிரதேசத்தின் முதலமைச்சராக இருந்தபோது கோயில் நகரமான அயோத்தியின் மேம்பாட்டுக்காக அவரது அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளை பட்டியலிட்டுள்ளார். அவர் செய்த பல்வேறு பணிகளில், அயோத்தியைச் சுற்றியுள்ள ஒரு வளையச் சாலையான “ப்ரிக்ரமா மார்க்” வழியெங்கும் பாரிஜாத மரங்கள் நடப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தச் சாலை முழுவதும், மத முக்கியத்துவம் சார்ந்த பல்வேறு வகையான மரங்களை நட்டிருப்பதை மேற்கொள்காட்டியுள்ளார். மேலும் ராமர் வழிப்பாட்டுக்காக சரயூ நதிக்கரையோரம் அமைக்கப்பட்டுள்ள விளக்குகளையும் பஜனை தளங்களில் அமைக்கப்பட்டுள்ள ஒலி அமைப்புகளையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உத்தர பிரதேசம் : இந்து முஸ்லிம் திருமணத்தைப் பதிவு செய்ய விடாமல் தடுத்த பஜ்ரங் தளம்

வருகின்ற 2022-ம் ஆண்டு உத்தர பிரதேசம் சட்டமன்ற தேர்தலைச் சந்திக்க இருக்கிறது. இந்தத் தேர்தல் தொடர்பாகப் பேசிய அவர், இனி பெரிய கட்சிகளுடன் வாக்கெடுப்புக்கு முந்தைய கூட்டணியை அமைக்க மாட்டேன் எனக் கூறியுள்ளார்.

2022-ம் ஆண்டு நடக்கும் உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் 403 இடங்களில் குறைந்தது 351 இடங்களை தனது கட்சி வென்று மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்கும் என நம்பிக்கையை வெளிப்படுத்திய அவர், “சிறிய கட்சிகளுடன் மட்டுமே வாக்கெடுப்புக்கு முந்தைய கூட்டணிகளை அமைப்பேன்” எனக் கூறியுள்ளார்.

மத உரிமைகளுக்கு எதிராகத் திரளும் மாநிலங்கள் – கேள்விக்குள்ளாகும் அரசமைப்புச் சட்டம்

அகிலேஷ் யாதவ், உத்தர பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்த சமயத்தில் காதலர் தினத்தன்று நினைவுச்சின்னமான தாஜ் மஹாலுக்கு அவரது மனைவி டிம்பிள் யாதவுடன் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்