Aran Sei

காப்பீட்டுத் துறையில் 74 சதவீதம் அந்நிய நேரடி முதலீடு – மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது

Image Credits: New Indian Express

காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டிற்கான உச்ச வரம்பை, தற்போதுள்ள 49 சதவீதத்திலிருந்து 74 சதவீதமாக உயர்த்த வழிவகை செய்யும் “காப்பீட்டு திருத்த சட்டம் 2021” மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மார்ச் 17-ம் தேதி, இச்சட்டம் மாநிலங்களவை நிறைவேற்றப்பட்டிருந்தது.

இந்த சட்டம் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், இச்சட்டத்தை உரிய ஆலோசனைகளுக்கு பின்னரே மத்திய அரசு கொண்டு வந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

எல்ஐசியின் தனிநபர் ஆயுள் காப்பீடு வருமானம் மிகப்பெரிய வீழ்ச்சி – எச்டிஎஃப்சி வருமானம் உயர்வு

மேலும், “இந்தியக் காப்பீடு ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி முகமையானது (ஐஆர்டிஏ) 60 காப்பீட்டு நிறுவனங்கள், ஏராளமான விளம்பரதாரர்கள் மற்றும் முன்னணி தொழிலதிபர்களுடன் செய்த ஆலோசனைகளில், அவர்கள் அனைவரும் அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தனர். ஆகவே, உரிய ஆலோசனைகளுக்குப் பின்னரே இந்த சட்டத்தை நாங்கள் கொண்டு வந்துள்ளோம்.” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னதாக, இம்மசோதா மீதான விவாதத்தின் போது பேசிய ​​காங்கிரஸ் உறுப்பினர்கள், இச்சட்டத் திருத்தமானது காலனியாதிக்கத்தின் புதிய வடிவம் என்று குறிப்பிட்டு, கடுமையாக எதிர்த்துள்ளனர்.

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மனீஷ் திவாரி,  அந்நிய நேரடி முதலீட்டை 74 சதவீதமாக உயர்த்துவது என்பது மத்திய அரசின் நிதி மேலாண்மையில் விழுந்த பெரிய துளையை மறைப்பதற்கான முயற்சியாகும் என்று விமர்சித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்