Aran Sei

“விவசாயிகள் சொல்வதை கேளுங்கள். அதுதான் ஜனநாயகம்” – முன்னாள் அரசு ஊழியர்கள் சங்கம்

மூன்று விவசாய சட்டங்கள்  கூட்டாட்சி மீதான தாக்குதலைக் நிகழ்த்துகின்றன என்று அகில இந்திய மற்றும் மத்திய முன்னாள் அரசு ஊழியர்கள் சங்கம் திறந்த கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.

ஆளும் அரசு விவசாயிகளின்  கோரிக்கைகளை கவனமாகக் கேட்பதுடன், நாடாளுமன்றத்தின் உள்ளேயும் வெளியேயும் உரையாடலில் ஈடுபடுவதன் மூலம் ஜனநாயக மரபுகள் மீதான மரியாதையை காக்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் கோரியுள்ளது.

போராடும் விவசாயிகள் மத்தியில் ஒரு நாள் – வீடியோ

தலைமைச் செயலாளர்கள், இணைச் செயலாளர்கள் மற்றும் காவல்துறை இயக்குநர்கள் உட்பட 78 முன்னாள் அதிகாரிள் கையொப்பமிட்ட அந்தக் கடிதத்தில், விவசாயச் சட்டங்களைக் கொண்டுவருவதற்கு முன்பு  விவசாயிகள் சங்க தலைவர்களுடன் எந்த ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை என்றும் இது சட்ட நடைமுறையே  இல்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

“2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம்  மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டபோது, ​​அவற்றை நாடாளுமன்றக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கை மறுக்கப்பட்டது.” என்று மேற்கோள் காட்டியுள்ளது.

வீரம் செறிந்த விவசாயிகள் போராட்டம் – வரலாறு படைக்கும் பெண்கள்

”அம்மாத செய்தித்தாள் குறிப்பிட்டுள்ள படி, சமீபத்திய காலங்களில், நாடாளுமன்றத் தேர்வுக் குழுவால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட மசோதாக்களின் சதவீதம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி 1-ல்  (14 வது மக்களவையில்) 60 சதவீதமாக இருந்ததுள்ளது , ஐக்கிய முற்போக்கு கூட்டணி 2-ல் (15 வது மக்களவையில்) 71 சதவீதமாக  உயர்ந்துள்ளது என்பதை சுட்டிக்காட்ட வேண்டிய அவசியம் உள்ளது.” என்று தரவுகளை பட்டியலிட்டுள்ளது.

ஆனால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் (16 வது மக்களவையில்),   25 சதவீதமாக குறைந்துள்ளது என்றும் தற்போதைய மக்களவையில், மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மசோதாக்களே நாடாளுமன்றக் குழுவால் அனுப்பப்பட்டுள்ளன என்றும்  கூறப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் – உரிமையை இழந்த மக்களின் கதை

முந்தைய நிகழ்வுகளைப் பற்றி மேற்கோள்காட்டுகையில், ”ஜனநாயக வழிமுறைகளை பின்பற்றாமல் இருப்பதும், பொது சமூகத்திடம் ஆலோசனை மேற்கொள்வதை முற்றிலும் புறக்கணிப்பதும்,காஷ்மீரில் 370 வது பிரிவு ரத்து செய்யப்பட்ட முறையிலும் குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்ட முறையிலும்  தெளிவாகியுள்ளது.” என்று கண்டித்துள்ளது.

எவ்வித முன்னெச்சரிக்கையும் செய்யாமல் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கால், லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சொல்லமுடியாத  துன்பங்கள் நேர்ந்தது என்று விமர்சித்துள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்கள் மரணம் – எண்ணிக்கை மறைக்கப்படுகிறதா?

இந்த நடவடிக்கைகள் அனைத்திலும் உள்ள குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், பாதிக்கப்பட்டவர்களை முன்பே கலந்தாலோசிக்க மறுத்ததும், அதற்கு பின்னரும் அவர்களுடன் பேச்சுவார்த்தை  நடத்தக்கூடாது என்பதில் உறுதியாக இருந்ததும் தான் என்று கடிதம் சுட்டிக்காட்டியுள்ளது..

அரசின்  நடவடிக்கைகளில் உடன்படாத மாற்றுக்கருத்துள்ள அனைவரையும் தேச விரோதி, பாகிஸ்தான் சார்பு, விருது வாப்சி (விருதுகளை திருப்பியளிக்கும்) கும்பல், நகர்ப்புற நக்சல்கள் மற்றும் கான் மார்கெட்  கும்பல்  என்று முத்திரை குத்தும் நடைமுறை, ஜனநாயகத்தின் முக்கிய அம்சமான விவாத நடைமுறையை  தவிர்ப்பதற்கும், கருத்து வேறுபாட்டை இழிவுபடுத்துவதற்கும், அவர்களை  குற்றவாளியாக்குவதற்கும் தேர்வு செய்யப்பட்டுள்ள முறையாகும். ”என்று அந்த கடிதத்தில்  குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்