Aran Sei

இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிராக செயல்படும் ட்விட்டர் நிறுவனம் : மத்திய அரசு கண்டனம்

நன்றி : தி இந்து

லடாக் யுனியன் பிரதேசத்தில் இருக்கும் லே பகுதியை, ஜம்மு காஷ்மீருடன் இருப்பதாக காட்டிய ட்விட்டர் நிறுவனத்துக்கு  எதிராக மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும்  ட்விட்டர் நிறுவனம் இந்த பிரச்சினையை தீர்க்க நவம்பர் இறுதி வரை நேரம் கேட்டுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த நவம்பர் 9 ஆம் தேதி, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இந்த விவகாரம் தொடர்பாக ட்விட்டர் துணைத் தலைவருக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

திட்டமிட்டு வெறுப்பை பரப்பும் ஃபேஸ்புக் நிறுவனம் – முன்னாள் ஊழியர் வாக்குமூலம்

அதில் ”இந்திய அரசு லடாக்கை தனி யுனியன் பிரதேசமாக அறிவித்து லேவை அதன் தலைநகரமாக அறிவித்திருக்கும் போது, லேவை ஜம்மு காஷ்மீரில் உள்ள பகுதியாக  காட்டுவது, இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிராக  ட்விட்டர் செய்யும் திட்டமிட்ட சதி” என அமைச்சகம் தெரிவித்துள்ளது.

”ட்விட்டர் நிறுவனம் தவறான வரைபடத்தைக் காண்பித்ததன் மூலம் இந்தியாவின் பிராந்திய ஒருமைப்பாட்டை அவமதித்துள்ளது. இதற்கு சட்ட ரீதியான நடவடிக்கை ஏன் மேற்கொள்ளக் கூடாது என்ற கேள்விக்கு ட்விட்டர் நிறுவனம் 14/11/20 க்குள் பதிலளிக்க வேண்டும்” எனவும் கூறியுள்ளது.

ஃபேஸ்புக், ட்விட்டருக்கு நாடாளுமன்ற கூட்டுக் குழு சம்மன் – அதிகாரிகள் ஆஜராக உத்தரவு

ஒரு இ-மெயில் மூலம் இதற்கு பதிலளித்த ட்விட்டரின் செய்தித் தொடர்பாளர், இந்திய அரசுடனும், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துடன் இணைக்கமாக பணியாற்றுவதில் ட்விட்டர் நிறுவனம் உறுதியுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

“நாங்கள் கடிதத்திற்கு முறையாக பதிலளித்துள்ளோம், எங்கள் கடிதத்தின் ஒரு பகுதியாக, இந்த குழப்பத்திற்கு காரணமாக இருந்த புவி-குறிச்சொல் தொடர்பாக இருந்த பிரச்சனையை சரி செய்து, சில முன்னேற்றங்களுடன் புதிய புவி-குறிச்சொல்லை அனுப்பியுள்ளோம்” என்று பதிலளித்துள்ளார் ட்விட்டரின் செய்தி தொடர்பாளர்.

இதற்கு முன்பு லேவை சீனாவின் ஒரு பகுதியாக ட்விட்டர் காட்டியுள்ளது. அப்போதே இந்திய அரசு  தனது கடுமையான கண்டனத்தை பதிவு செய்திருந்தது.  ”நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டை அவமதிப்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று” என தெரிவித்திருந்தது. அதைத் தொடர்ந்து, தகவல் தொழில்நுட்பச்  செயலாளர் ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சிக்கு ஒரு கடிதத்தின் மூலம் கண்டனத்தை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது வரையிலும், “ லேவை லடாக் யூனியன் பிரதேசத்தின் ஒரு பகுதியாக காண்பிப்பதற்கான வரைபடத்தை ட்விட்டர் இன்னும் சரி செய்யவில்லை. இந்திய அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டிற்கு எதிராக, ஜம்மு-காஷ்மீரின் ஒரு பகுதியாக  லேவைக் காட்டுகிறது, ”என்று அரசாங்க அதிகாரிகள் கூறியதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்