Aran Sei

பீகார் தேர்தல்: ‘வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு’ – இடதுசாரிகள் புகார்

மூன்று கட்டங்களாக நடந்து முடிந்த பீகார் சட்டமன்றத் தேர்தலின் முடிவுகள் வெளியாகி உள்ளன.  இதையொட்டி, இடதுசாரி கட்சிகள் ஒன்றிணைந்து  தேர்தல் ஆணையத்திடம் புகார் அறிக்கை ஒன்றை அளித்துள்ளனர். அதில்,  “கடைசி நேர வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடந்துள்ளன.” என்று  குற்றம் சாட்டியுள்ளனர்.

மகா கூட்டணியில் இடதுசாரி கட்சிகள் போட்டியிட்ட 29 இடங்களில் 16 இடங்களில் வெற்றிப்பெற்றுள்ளது.

சிபிஐ (எம்எல்) – 12,

சிபிஐ (எம்) – 2,

சிபிஐ – 2.

`காங்கிரசுக்கு 50; இடதுசாரிகளுக்கு 50 என்பதுதான் நியாயம்’ – சிபிஐ (எம்எல்)

சிபிஐ (எம்)-ன் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, சிபிஐ-ன் பொதுச் செயலாளர் டி.ராஜா மற்றும் சிபிஐ (எம்எல்) பொதுச் செயலாளர் திபங்கர் பட்டாச்சார்யா ஆகியோர் இந்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.

“கடைசி கட்ட வாக்கு எண்ணிக்கையின் போது, சில முறைகேடுகள் நடந்துள்ளன என்று இடதுசாரி கட்சிகள் உறுதியாகக் கருதுவின்றன.  அதை தேர்தல் ஆணையம் உடனடியாக கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். மகா கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுடன் சேர்ந்து, இடதுசாரி கட்சிகள் இந்த பிரச்சனையை இந்திய தேர்தல் ஆணையத்திடம் எடுத்துச் செல்லும்.இரு கூட்டணிகளுக்கு இடையேயான வாக்குகளின் வித்தியாசம் குறைவாகவே உள்ளது.”என்று அந்த புகார் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பீகார் தேர்தல் – மூடப்பட்ட சர்க்கரை ஆலைகளுக்கு விடிவில்லை

 

” கடந்த ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில், பாஜக தலைமையிலான கூட்டணி பெற்ற வாக்குகளில் 12 சதவீதத்தை இந்தத் தேர்தலில் இழந்துள்ளது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பீகாரில் முடிவுக்கு வரும் சமூக நீதி அரசியல் – அதன் புதிய குரல் என்னவாக இருக்கும்?

தற்போதைய முதலமைச்சர் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், கடந்த சட்டமன்றத் தேர்தலில் 71 தொகுதிகளில் வெற்றிப்பெற்றிருந்த நிலையில், இப்போது 43 இடங்களை மட்டுமே வென்றுள்ளது என்றும், “இதன் மூலம் பெரும்பாலான பீகார் வாக்காளர்களால் அவர் நிராகரிக்கப்பட்டுள்ளார் என்று தெரிகிறது.” என்று அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், பீகார் வாக்காளர்கள் மத்தியில், பிரதமர் நரேந்திர மோடியையும் பாஜகவும், பிரிவினைகளை ஏற்படுத்த முயற்சித்தது என்றும் அதை மகா கூட்டணி முறியடித்தது என்றும் தெரிவித்துள்ளது.

பீகார் தேர்தல் – ராஷ்ட்ரிய ஜனதா தளத்தை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் – திருமாவளவன் வலியுறுத்தல்

வெற்றிப்பெற்ற 16 எம்எல்ஏக்களும் பீகார் மக்களின் வேலை வாய்ய்பு ,சமூக/பொருளாதார அநீதிகள் போன்ற அனைத்து முக்கியமான பிரச்சினைகளுக்கும் குரல் கொடுப்பார்கள் என்று அறிக்கையில் இடதுசாரி தலைவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

நேற்று (நவம்பர் 11) சிபிஐ (எம்)-ன் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த அறிக்கையை இணைத்து, வாக்காளர்களுக்கு வாழ்த்துகள்  கூறியுள்ளார். அதில், மகா கூட்டணி வேட்பாளர்களுக்கு அதரவு அளித்து பீகார் வாக்காளர்களுக்கு  இடதுசாரிகள் கட்சிகள் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

தேர்தல் முடிவுகள் குறித்து, நேற்று முன்தினம் (நவம்பர் 10) திபங்கர் பட்டாச்சார்யா தனது ட்விட்டர் பக்கத்தில்  ”அஞ்சல் வாக்குகளை விட வாக்கு வித்தியாசம் குறைவாக உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த தேர்தல் ஆணையம் உத்தர விட வேண்டும். மகா கூட்டணி வேட்பாளர்கள் பலர், மிகவும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியுற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடந்துள்ளன.” என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்