லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சில், லே தேர்தலில் பாஜக 15 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. அதற்கடுத்தபடி காங்கிரஸ் 9 இடங்களைப் பிடித்துள்ளது.
2015-ம் ஆண்டு பாஜக 18 இடங்களை வென்றது. இந்த ஆண்டு பாஜக 15 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியும் போட்டியிட்டது, ஆனால் ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை.
இந்த மேம்பாட்டு கவுன்சில், ஒரு தன்னாட்சி மாவட்ட கவுன்சில் ஆகும், இது லே மாவட்டத்தை நிர்வகிக்கிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பிரிக்கப்பட்டு, லடாக் தனி யூனியன் பிரதேசமாக உருவாக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் தேர்தல் இது.
லடாக் மேம்பாட்டு கவுன்சிலில் மொத்தம் உள்ள 30 உறுப்பினர்களில் 26 உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 4 பேர் நியமன உறுப்பினர்கள்.
26 உறுப்பினர் பதவிகளுக்கு மொத்தம் 94 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே நேரடி போட்டி நிலவியது.
இந்தத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அக்டோபர் 13 மற்றும் 14-ல் தபால் மூலமாகவும், அக்டோபர் 22 அன்று 26 தொகுதிகளில் 294 வாக்குச் சாவடிகளிலும் நடைபெற்றது. மொத்தம் 54,257 வாக்காளர்கள் வாக்களித்தனர்.
இதற்கான வாக்கு ண்ணிக்கை நேற்று நடைபெற்றது. 2,538 அஞ்சல் வாக்குச் சீட்டுகள் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபட்ட வாக்காளர்களின் 1,635 வாக்குகளும் எண்ணப்பட்டது.
இதில், 26 தொகுதிகளில், பாஜக 15, காங்கிரஸ் 9 மற்றும் சுயச்சை வேட்பாளர்கள் 2 தொகுகளில் வெற்றி பெற்றுள்ளனர்.
நுப்ரா பள்ளத்தாக்கின் ஏழு இடங்களில் ஆறு இடங்கள் உட்பட, லே மாவட்டத்திலிருந்து தொலைவில் உள்ள பல இடங்களை பாஜக கைப்பற்றியுள்ளது. துர்டூக்கைச் சேர்ந்த குலாம் மெஹ்தி, சுச்சோட்டைச் சேர்ந்த மிர்சா உசேன் ஆகிய இஸ்லாமிய வேட்பாளர்களும் வெற்றிபெற்றுள்ளனர்.
கல்த்சி தொகுதியில், பாஜகவை சேர்ந்த லோப்ஸாங் ஷெராப், காங்கிரஸின் ஜிக்மெட் ரப்காயிஸை ஒன்பது வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.
கல்த்சி தொகுதியில், பாஜகவை சேர்ந்த லோப்ஸாங் ஷெராப், காங்கிரஸின் ஜிக்மெட் ரப்காயிஸை ஒன்பதே வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார். இருப்பினும், சுச்சோட்டில், மிர்சா உசேன், சுயேட்சை வேட்பாளரான சயீதா பானோவை 735 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார்.
கீழ் லே தொகுதியில், பாஜகவின் பி.வாங்க்டானை 1,116 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரசை சேர்ந்த செரிங் நம்கியால் தோற்கடித்தார்.
பாஜக வென்ற தொகுதிகளில் துர்டுக், பனாமிக், தேகர், ஹண்டர், டிஸ்கிட், டாங்க்ட்சே, குங்கியம், ஸ்கூ மார்க்கா, திக்ஸி, கோர்சோக், லிங்ஷெட், லாமாயுரு, மார்ட்சைலாங், கால்ட்சே மற்றும் சுச்சோட் ஆகியவை அடங்கும்.
கீழ் லே, மேல் லே, இகூ, சாஸ்போல், பாஸ்கோ, சக்தி, பியாங், ஸ்கர்பூச்சன் மற்றும் டெமிஸ்காம் ஆகிய இடங்களை காங்கிரஸ் வென்றுள்ளது. சுஷூல் மற்றும் நியோமா ஆகிய இடங்களை சுயேட்சை வேட்பாளர்கள் வென்றுள்ளனர்.
First major victory for BJP in UT Ladakh. BJP won 15 out of 26 seats in the Leh Autonomous District Council elections. Congrats team BJP, Ladakh UT
— Ram Madhav (@rammadhavbjp) October 26, 2020
“லடாக் யூனியன் பிரதேசத்தில் பாஜகவுக்கு முந்தமுறையாகக் கிடைத்த பெரிய வெற்றி. லே தன்னாட்சி மாவட்ட கவுன்சில் தேர்தலில் 26 இடங்களில் 15 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. லாடக் பாஜக குழுவுக்கு வாழ்த்துக்கள்!” என்று அக்கட்சியின் தலைவர் ராம் மாதவ் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.