Aran Sei

சீனா 38,000 சதுர கி.மீ. ஆக்கிரமிப்பு: ராஜ்நாத் சிங்

credit:commons.wikimedia.org

இந்திய-சீன எல்லை பிரச்சினை இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று மக்களவையில் தெரிவித்தார்.

இந்திய-சீன எல்லைப் பிரச்சினை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று மக்களவையில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில், இந்திய-சீன எல்லை பிரச்சினை தொடர்பாக மக்களவையில் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ’எல்லை பிரச்சனை இன்னமும் தீர்க்கப்படவில்லை’ என்று கூறினார்.

”இரு தரப்பினரும் பரஸ்பரம் ஏற்கும்படி ஒரு தீர்வை இப்போது வரையில் எட்டவில்லை” என்றும் இரு நாட்டு எல்லை தொடர்பாக சீனா கருத்து வேறுபாடு கொண்டிகிறது என்றும் கூறினார்.

லடாக்கில் தோராயமாக 38,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவை சட்டத்துக்கு புறம்பாக  சீனா  தன்வசப்படுத்தி இருப்பதாகவும் இந்தியாவின் இறையாண்மையை பாதுகாப்பதில் நமது படைகள் உறுதியாக இருப்பதாகவும் ராஜ்நாத் சிங் கூறினார்.

வலுக்கட்டாயமாக எல்லையை மாற்றியமைக்க சீனா முயற்சி செய்வதை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று சீனாவிடம் தெரிவித்திருப்பதாக அவர் கூறினார்.

மக்களவையில் இந்தப் பிரச்சினை தொடர்பாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வைத்துள்ள வலுவான வாதம் பற்றி விவாதிக்க போதிய வாய்ப்புகள் வழங்கப்படாததைக் கண்டித்து சஷி தரூர் உள்ளிட்ட காங்கிரஸ் உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை அருகே மாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பாதுகாப்புத் துறை அமைச்சர் பேசுகையில் இந்தியாவின் எல்லை கட்டுப்பாட்டு பகுதிக்குள் சீனா அத்துமீறி நுழைந்துள்ளதாக கூறுகிறார். ஆனால், பிரதமரோ இந்திய நிலப்பரப்புக்குள் சீனா அத்துமீறி நுழையவில்லை என்று கூறியுள்ளார். பிரதமர் ஏன் அவ்வாறு கூறினார் என்று அரசாங்கம் விளக்கமளிக்குமா? என  தனது ட்வீட்டர் பக்கத்தில் சஷி தரூர் கேள்வி எழுப்பியுள்ளார்.

எல்லை கட்டுப்பாடு பகுதி பற்றிய பேச்சுகளில், இந்தியா மற்றும் சீனா இடையில் கருத்தொற்றுமை எட்டியிருப்பதாக கூறுகிறார் பாதுகப்பு துறை அமைச்சர் கூறியுள்ளர்.

ஆனால், எது எல்லை கட்டுப்பாடு பகுதி என்பதை பொறுத்தவரையில் இரு நாடுகளுக்கும் இடையில் கருத்து வேறுப்பாடு நிலவுகிறது. இது மீண்டும் மோதலுக்கு வழிவகை செய்யாதா? என்ற கேள்வியை எழுப்பும் சஷி தரூர், முன்பு எல்லையாக இருந்த பகுதியையே எல்லை கட்டுப்பாட்டு பகுதியாக ஏன் வலியுறுஅத்தக் கூடாது என்றும் தனது ட்வீட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்