Aran Sei

கொல்கத்தா ரயில்வே கட்டிடத்தில் தீப்பிடித்ததில் 9 பேர் மரணம் – உயர்மட்ட விசாரணை அறிவிப்பு

Image credit : indiatoday.in

கொல்கத்தாவில் உள்ள ரயில்வே கட்டிடம் ஒன்றில் தீப்பிடித்ததில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று இந்தியா டுடே செய்தி தெரிவிக்கிறது.

கொல்கத்தாவின் ஸ்ட்ராண்ட் சாலையில் உள்ள, ரயில்வே அலுவலகங்கள் இயங்கும் புதிய கோய்லாகாட் கட்டிடத்தின் 13-வது மாடியில், நேற்று மாலை 6.10 மணியளவில் தீப்பிடித்திருக்கிறது.

இதைத் தொடர்ந்து 10 தீயணைப்பு வண்டிகள் தீயை அணைக்க விரைந்தன. கட்டிடத்தில் இருந்தவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தீயை அணைக்க போராடிய தீயணைப்பு வீரர்கள் 4 பேர், இரண்டு ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள், ஒரு கொல்கத்தா போலீஸ் வீரர் உயிரிழந்துள்ளனர்.

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, நேற்று இரவே விபத்து நடந்த இடத்துக்கு நேரில் சென்று மீட்புப் பணிகளை மேற்பார்வை இட்டுள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ 10 லட்சம் கருணைத் தொகையும், உறுப்பினர் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.

ரயில்வேயின் புதிய கோய்லாகாட் கட்டிடத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதன் விளைவாக, ரயில்வேயின் கிழக்கு மண்டல கணினி பயண முன்பதிவு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன என்று இந்தியா டுடே தெரிவித்துள்ளது. கிழக்கு இந்தியாவின் பயணிகள் முன்பதிவு அமைப்பின் கணினி இந்தக் கட்டிடத்தில் உள்ளது என்று ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஒரு உயர்மட்ட விசாரணை நடத்தப்படும் என்று ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் அறிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்