Aran Sei

நிதி ஆயோக் வெளியிட்ட சுகாதார அளவீடு – கேரளா முதலிடம், பாஜக ஆளும் உத்தரபிரதேசம் கடைசி இடம்

2019-20 ஆண்டிற்கான நிதி ஆயோக் வெளியிட்ட நான்காவது சுகாதார குறியீட்டின்படி, இந்தியாவில் உள்ள பெரிய மாநிலங்களில் ஒட்டுமொத்த சுகாதார செயல்திறனின் அடிப்படையில் கேரளா தொடர்ந்து முதலிடம் பிடித்துள்ளது. அதே நேரத்தில் பாஜக ஆளும் உத்தரபிரதேசம் கடைசி இடத்தில் உள்ளது.

உலக வங்கியின் தொழில்நுட்ப குழுவின் உதவியுடன் இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்துடன் இணைந்து நிதி ஆயோக் இந்த அறிக்கையைத் தயாரித்துள்ளது.

இந்த சுகாதார அளவுகோல்களில் தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகியவை முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது. பீகார் மற்றும் மத்தியபிரதேசம் ஆகியவை முறையே உத்தரபிரதேசத்திற்கு அடுத்து மிக மோசமான நிலையில் உள்ளன.

காந்தியை கொன்ற கோட்சேவுக்கு தலைவணங்குகிறேன் – இந்துத்துவ சாமியார் காளிச்சரண் சர்ச்சை பேச்சு

அதே சமயம் சிறிய மாநிலங்களில், சுகாதார அளவீடுகளின் ஒட்டுமொத்த செயல்திறனிலும், அதிகரிக்கும் செயல்திறனிலும் மிசோரம் மற்றும் திரிபுரா ஆகியவை சிறந்த மாநிலங்களாக உருவெடுத்துள்ளது. யூனியன் பிரதேசங்களில், டெல்லி மற்றும் ஜம்மு & காஷ்மீர் ஆகியவை சுகாதார அளவீடுகளின் ஒட்டுமொத்த செயல்திறனில் கடைசி இடங்களில் உள்ள அதே சமயம், தொடர்ந்து அதிகரிக்கும் செயல்திறனில் முன்னணியில் உள்ளது.

சுகாதார அளவீடுகளின் ஒட்டுமொத்த செயல்திறனில் தொடர்ந்து நான்காவது சுற்றிலும் கேரளா முதலிடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பு பேச்சு – உச்ச நீதிமன்றம் தலையிட வழக்கறிஞர்கள் கடிதம்

சுகாதார அளவீடுகளில் கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகியவை முறையே முதலிரண்டு இடங்களைப் பிடித்திருந்தாலும், தொடர்ந்து அதிகரிக்கும் செயல்திறனில் முறையே 12 ஆவது மற்றும் 8 ஆவது இடத்தில் உள்ளன.

சுகாதார அளவீடுகளின் ஒட்டுமொத்த செயல்திறன் மற்றும் தொடர்ந்து அதிகரிக்கும் செயல்திறன் ஆகிய இரண்டிலும் தெலுங்கானா சிறப்பாகச் செயல்பட்டு இந்த இரண்டிலும் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

சுகாதார அளவீடுகளின் ஒட்டுமொத்த செயல்திறன் மற்றும் தொடர்ந்து அதிகரிக்கும் செயல்திறன் ஆகிய இரண்டிலும் ராஜஸ்தான் மிக மோசமான நிலையில் உள்ளதாக இந்த அறிக்கை நமக்குச் சுட்டிக்காட்டுகிறது.

Source: The Hindu

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்