Aran Sei

கட்டாய மதமாற்றம் எனக்கூறி கேரள கன்னியாஸ்திரிகளை மிரட்டிய விவகாரம் – இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்த இருவர் கைது

யில் பயணத்தின்போது கேரள கன்னியாஸ்திரிகளை மிரட்டிய விவகாரத்தில் இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

“கன்னியாஸ்திரிகள் தாக்கப்பட்டது உண்மை” – பியூஷ் கோயல் கருத்துக்கு பிணராயி விஜயன் பதில்

கடந்த மார்ச் 19 அன்று ஈஸ்டர் விடுமுறையின் காரணமாக டெல்லியிலிருந்து ரூர்கேலாவுக்கு மதஉடையிலிருந்த இரண்டு கன்னியாஸ்திரிகளும் அவர்களுடன் சாதாரண உடையிலிருந்த இரண்டு தேவாலய பெண் ஊழியர்களும் ரயில் பயணம் மேற்கொண்டிருந்தனர்.

கன்னியாஸ்திரிகள் தாக்கப்பட்டதாக சொல்லப்படும் குற்றச்சாட்டு ஆதாரமற்றது – மத்திய அமைச்சர் பியுஷ் கோயல்

ரயில் ஜான்சி ரயில்நிலையம் அருகில் வந்து கொண்டிருந்தபோது, ரயிலில் ஏறிய ஏபிவிபி உறுப்பினர்கள், அந்த இரண்டு பெண்களையும் கன்னியாஸ்திரிகள் சாதாரண உடையிலிருந்த பெண்களைக் கட்டாயமதமாற்றத்துக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி பிரச்சனையில் ஈடுபட்டார்கள்.

இந்த விவகாரம் தொடர்பாகக் கன்னியாஸ்திரிகள் காவல்நிலையத்தில் புகாரும் அளித்திருந்தனர்.

இந்நிலையில் இந்தப் புகாரின் பேரில் அஞ்சேல் அர்ஜரியா, புர்கேஸ் அம்ராயா ஆகிய இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்