Aran Sei

கேரளா காவல் துறை சட்டத் திருத்தம் ’அதிர்ச்சி அளிக்கிறது’ – ப.சிதம்பரம்

வதூறு பரப்பும் வகையில் செய்தி வெளியிட்டால் 3 ஆண்டு சிறை தண்டனை என்று காவல்துறை சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்திருக்கும் கேரள அரசின் செயல் அதிர்ச்சி அளிக்கிறது என்று காங்கிரஸ் மூத்தத் தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

கேரள காவல்துறை சட்டத்தில் பிரிவு 118ல் 118ஏ என்ற ஒரு பிரிவு கூடுதலாகச் சேர்க்கப்பட்டு, காவல்துறையினருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

‘பொதுமக்கள் காவல் நிலையம் செல்லவே பயப்படுகின்றனர்’ – உயர் நீதிமன்ற மதுரை கிளை

118 ஏ பிரிவில்,  “அச்சுறுத்தும், அவதூறு செய்யும் எந்தவொரு கருத்தை தயாரித்தல், வெளிப்படுத்துதல், வெளியிடுதல், பரப்புதல் ஆகியவற்றுக்கான தண்டனை.  ஒரு நபரை அல்லது நபர்களை, அவமானப்படுத்துவது, அவதூறு செய்வது, அந்த நபரின் மனம், நற்பெயர், சொத்து, நபர்களின் வர்க்கம் அல்லது அவர்களுக்கு ஆர்வமுள்ள வேறு எந்த நபரின் மனதையும் காயப்படுத்துகிறது ஆகியவற்றுக்கு மூன்று வருடங்கள் அல்லது அபராதத்துடன் பத்தாயிரம் ரூபாய் வரை அல்லது இரண்டும் விதிக்கப்படும்.” என்று சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக ‘தி வயர்’ இணையதளம் தெரிவித்துள்ளது.

மரணமாவது எங்களுக்கு நிம்மதியைத் தரட்டும் – காவல்துறையால் தற்கொலை செய்துகொண்ட குடும்பம்

இந்த அவசரச் சட்டத்திருத்தத்துக்கு ஆளுநர் முகமது ஆரிஃப் கான் நேற்று (நவம்பர் 22) ஒப்புதல் அளித்துள்ளார்.

2015-ம் ஆண்டில், ஸ்ரேயா சிங்கால் வழக்கில் உச்ச நீதிமன்றம், தகவல் மற்றும் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 66 ஏ மற்றும் கேரள காவல்துறை சட்டத்தின் பிரிவு 118 டி ஆகியவற்றை கடுமையாக விமர்சித்தது. இந்த இரண்டு சட்டங்களும் அரசியலமைப்பிற்கு எதிரானவை என்றும் பேச்சு உரிமைகளை மறுக்கும் விதமாக உள்ளது என்றும் கண்டனம் தெரிவித்திருந்ததாக ‘தி வயர்’ சுட்டிக்காட்டியுள்ளது.

முன்பு முகநூல் பதிவு ஒன்றுக்காக, சட்ட பிரிவு 118டி-யின் கீழ் வழக்கு பதியப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் அனூப் குமாரன்,  ”இந்த புதிய சட்ட பிரிவான 118-ஏ, உச்சநீதிமன்றம் விமர்சித்த 118-டி சட்டப்பிரிவை விட மோசமானது.” என்று கூறியுள்ளார்.

காவல்துறை விசாரணையில் வியாபாரி மரணம் – சாத்தான்குளத்தை தொடர்ந்து மற்றொரு நிகழ்வு

இது குறித்து காங்கிரஸ் மூத்தத் தலைவர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில்,  கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் “சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்பினால் 5 ஆண்டு சிறை என்ற சட்டத்தை கேரளாவில் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு கொண்டுவந்துள்ளதை நினைத்து அதிர்ச்சி அடைந்தேன். அதுமட்டுமல்லாமல் எதிர்க்கட்சித்தலைவரும் காங்கிரஸ் மூத்தத் தலைவருமான ரமேஷ் சென்னிதலா மீதான மதுபான மோசடி வழக்கை மீண்டும் விசாரிக்க அனுமதியளித்துள்ள அரசின் முடிவும் எனக்கு அதிர்ச்சியளிக்கிறது.” என்று கூறியுள்ளார்.

`தகவல் அறியும் சுதந்திரத்தை மீறுவதா’ – பிரான்ஸில் வெடித்த போராட்டம்

மேலும், “ஏற்கெனவே இந்த வழக்கை விசாரணை  செய்த அமைப்புகள், எந்த ஆதாரங்களும் இல்லை என்று 4 முறை வழக்கை முடித்துள்ளன. இதுபோன்ற அட்டூழியமான,அராஜகமான முடிவுகளை எவ்வாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளரான எனது நண்பர் சீதாராம் யெச்சூரி ஆதரிக்கிறார்.” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

 

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சைபர் தாக்குதல்களைத் தடுக்க இந்த சட்டம் உதவும் என்று இடது முன்னணி அரசு கூறுகிறது, ஆனால் இதை தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்கள் மூலம் ஏன் தடுக்க முடியாது என்று தெளிவாக கூறப்படவில்லை என்று ‘தி வயர்’ தெரிவித்துள்ளது.

மேலும், இந்தத் திருத்தம் காவல்துறைக்கு அதிக அதிகாரத்தை அளிக்கும் என்றும் கருத்து சுதந்திரத்தை குறைக்கும் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்