Aran Sei

கேரள உள்ளாட்சி தேர்தல் : மதச்சார்பின்மைக்கு கிடைத்த வெற்றி – பினராயி விஜயன்

credits : indian express

கேரளாவில் உள்ள உள்ளாட்சி தேர்தல் மூன்று கட்டமாக நடைபெற்றது. இந்தத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்), காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுபிஎஃப்), பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (எண்டிஏ) ஆகியவை போட்டியிட்டன.

கடந்த டிசம்பர் 8-ம் தேதி திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா, இடுக்கி ஆகிய மாவட்டங்களில் நடத்தப்பட்ட முதற்கட்ட தேர்தலில் 73.12 சதவீத வாக்குப்பதிவும், டிசம்பர் 10-ம் தேதி கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, வயநாடு ஆகிய மாவட்டங்களில் நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட தேர்தலில் 76.78 சதவீத வாக்குப்பதிவும், டிசம்பர் 14-ம் தேதி கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் நடைபெற்ற மூன்றாம் கட்ட தேர்தலில் 78.64 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. இந்தத் தேர்தலில் மொத்தமாக 76 சதவீத வாக்குகள் பதிவாகிவுள்ளன.

கேரள ஆராய்ச்சி நிறுவனத்திற்கு கோல்வால்கரின் பெயர் – வலுக்கும் எதிர்ப்பு

இந்நிலையில் இன்று காலை (16-12-20) 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது, தொடக்கம் முதலே கேரளத்தின் ஆளுங்கட்சி கூட்டணியான  இடது ஜனநாயக முன்னணி தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தது. இந்தியாவில் நடக்கும் அனைத்து மாநில தேர்தலிலும் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்று வந்த பாஜக இந்தத் தேர்தலில் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி கேரளாவை ஆளும் இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்) 500-க்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகளையும் 3 மாநகராட்சிகளையும் 10 மாவட்ட பஞ்சாயத்துகளையும் 108 தொகுதி பஞ்சாயத்துகளையும் கைப்பற்றி மாபெரும் வெற்றிப்பெற்றுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி இரண்டாவது இடத்தையும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளன.

ஒன்றிணையும் விவசாய சங்கங்கள் – காலவரையற்ற போராட்டத்தைத் தொடங்கியது கேரளம்

இன்றைய 7.30 மணி நிலவரப்படி,

கிராம பஞ்சாயத்துகளில் எல்டிஎஃப் 514 இடங்களிலும், யுடிஎஃப் 377 இடங்களிலும், எண்டிஏ 22 இடங்களிலும் வெற்றிப்பெற்றுள்ளன.

தொகுதி பஞ்சாயத்துகளில் எல்டிஎஃப் 108 இடங்களிலும், யுடிஎஃப் 44 இடத்திலும் வெற்றிப்பெற்றுள்ளது. இதில் பாஜக கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றிப்பெறவில்லை.

மாவட்ட பஞ்சாயத்துகளில் எல்டிஎஃப் 10 இடங்களிலும், யுடிஎஃப் 4 இடங்களிலும், வெற்றிப்பெற்றுள்ளன. இதில் பாஜக கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றிப்பெறவில்லை.

நகராட்சிகளில் எல்டிஎஃப் 45 இடங்களிலும், யுடிஎஃப் 35 இடங்களிலும் எண்டிஏ 2 இடங்களிலும் வெற்றிப்பெற்றுள்ளனர்.

மாநகராட்சிகளில் எல்டிஎஃப் 3 இடங்களிலும், யுடிஎஃப் 3 இடங்களிலும் வெற்றிப்பெற்றுள்ளது. இதில் பாஜக கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றிப்பெறவில்லை.

கேரள பத்திரிகையாளர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி – மதுரா நீதிமன்றம்

கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி பெற்றுள்ள வெற்றிக்கு அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் ”இது மதச்சார்பின்மை மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான வெற்றியாகும் ” என பதிவிட்டுள்ளார்.

சட்டமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்படும் இந்த உள்ளாட்சி தேர்தலில் இடது ஜனநாயக முன்னணி மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்