Aran Sei

கேரள பத்திரிகையாளர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி – மதுரா நீதிமன்றம்

நன்றி : தி இந்தியன் எக்ஸ்பிரஸ்

கேரள செய்தி இணையதளத்தைச் சேர்ந்த அதிக் உர் ரகுமான், ஆலாம் மற்றும் மசூதின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துள்ளது மதுரா மாவட்ட நீதிமன்றம்.

சித்திக் காப்பன், அதிக் உர் ரகுமான், மசூத் அகமது, ஆலம் ஆகிய நான்கு பேரும் டெல்லியில் உள்ள ஒரு மலையாள செய்தி இணையதளத்தில்  வேலைபார்த்து வந்தனர்.

கடந்த அக்டோபர் 5-ம் தேதி ஹத்ராஸ் சம்பவத்தை பற்றி தகவல் சேகரிக்கச் சென்ற இவர்கள் ”பொது அமைதிக்கு குந்தகம்” ஏற்படுத்துவதாகக் கூறி உத்தர பிரதேச காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உத்தர பிரதேசத்தில் ஒரு ”சர்வதேச சதி” திட்டத்தை அரங்கேற்ற பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பின்னணியில் சித்திக் மற்றும் குழு வந்துள்ளதாக, முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது மதுரா காவல்துறை. அவர்கள் மீது தேசதுரோகம் மற்றும் சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டங்களில் (UAPA)  வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

சித்திக்கிற்கு ஒரு நீதி, அர்னாப் கோசாமிக்கு ஒரு நீதியா? – கபில் சிபல் கேள்வி

முதலில் மதுராவின் குற்றப் பிரிவு காவல்துறையால் விசாரிக்கபட்டு வந்த வழக்கு பின்னர் உத்தர பிரதேச சிறப்பு பிரிவு காவல்துறைக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிக் உர்  ரகுமான், ஆலாம் மற்றும் மசூத்  ஜாமீன் கோரிய வழக்கில் நான்கு நாட்கள் விசாரனை நடைபெற்றது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட கூடுதல் மாவட்ட நீதிபதி மாயூர் ஜெயின் “மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளில் சிக்கியிருக்கும் இவர்களின் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால், தற்போதைய சூழலில் ஜாமீன் தர இயலாது” என உத்தரவிட்டுள்ளார்.

கேரள பத்திரிக்கையாளர்கள் தரப்பில் வாதாடிய மதுபன் தத் சதுர்வேதி “அரசு தரப்பு வழக்கறிஞரின் வாதத்துக்கே நீதிபதி முக்கியத்துவம் அளிப்பதாகவும், தங்கள் தரப்பு வாதம் புறக்கணிப்படுவதாகவும்” குற்றஞ்சாட்டியுள்ளார்.

அதிக் உர் ரகுமான் தீவிரமான உடல் உபாதைகளால் அவதிப்படுகின்ற நிலையிலும் ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள அவர் இதையடுத்து உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார் என பிடிஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதில் சித்திக் கப்பான் எந்த நீதிமன்றத்திலும் ஜாமீன் கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்