Aran Sei

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை மீண்டும் ஆராய குழு அமைக்கவும் – உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு பிரமாணப் பத்திரம்

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பான வழக்கில் கேரள மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள புதிய பிரமாணப் பத்திரத்தில், முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை ஒரு சுயாதீன நிபுணர் குழுவால் மீண்டும் ஆராயப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

இக்குழுவில் கட்டட வடிவமைப்பு, புவியியல் போன்ற துறைகளில் தகுதி வாய்ந்த பொறியாளர்கள் மற்றும் நிபுணர்கள் இருக்க வேண்டும் என்றும் நீரியல், ஹைட்ரோ-மெக்கானிக்கல் அணை பாதுகாப்பு, அணையின் கட்டுமானம் மற்றும் மேற்பார்வை, அணையில் உள்ள கருவி, அணை பகுதியில் உள்ள நில அதிர்வுகள் ஆகியவை அக்குழுவால் மீண்டும் ஆராயப்பட வேண்டும் என்றும் கேரள அரசு கோரியுள்ளது.

முல்லைப் பெரியாற்றில் புதிய அணை: முதல்வர்களின் கூட்டத்தில் ஒருமித்த முடிவு எடுக்கப்படுமென கேரள அரசு நம்பிக்கை

அணைகளின் பாதுகாப்பு ஆய்வுச் சட்டம் 2018 -ன் வழிகாட்டுதல்களின்படி, விரிவான முறையில் அணை பாதுகாப்பு குறித்து மறுஆய்வு நடைமுறையை உருவாக்க வேண்டும் என்று பிரமாணப் பத்திரத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அணை தொடர்பாக கேரள அரசு தாக்கல் செய்த புதிய ஆவணங்களைப் பரிசீலிக்க தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கால அவகாசம் கேட்டுள்ளதையடுத்து, தமிழ்நாடு மற்றும் கேரளா இடையேயான முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கின் விசாரணை இன்று (மார்ச் 23) நடைபெறும் என்று உச்ச நீதிமன்றம் நேற்று (மார்ச் 22) தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

‘ஒன்றிய அரசின் அணைகள் பாதுகாப்புச் சட்டம் கூட்டாட்சிக்கு எதிரானது’- மாநிலங்களவையில் வைகோ கண்டனம்

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் பெரியாற்றின் மீது 1895ஆம் ஆண்டு முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டது. 126 ஆண்டுகள் பழமையான இந்த அணை தொடர்பாக இரு மாநிலங்களுக்கு இடையே நீண்ட காலமாக பிரச்சனை இருந்து வரும் நிலையில், அணையின் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது.

Source: New Indian Express

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்