Aran Sei

‘ஜம்மு காஷ்மீர் விற்பனைக்கு’ – நிலத்தின் மீது உரிமையை இழந்த மக்கள்

ம்மு காஷ்மீரில், வெளியாட்கள் நிலம் வாங்குவதற்கும், முதலீடு செய்வதற்கும் வழி வகுக்கும் சட்டங்களை மத்திய அரசு செயல்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது.

அரசியல் சாசன பிரிவு 370 திரும்பப் பெறப்பட்டதன் பின்னர், காஷ்மீர் மக்கள் தங்கள் நிலத்தின் மீது அனுபவித்து வந்த சிறப்பு உரிமை, இந்த சட்டங்கள் நடைமுறைக்கு வந்ததை தொடர்ந்து முடிவுக்கு வந்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

காஷ்மீர்: உரிமைகள் மறுக்கப்பட்டதன் நினைவு நாள் -ஆகஸ்ட் 5

‘ஜம்மு காஷ்மீர் வளர்ச்சி சட்டம்’ என்ற பெயரில் அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ள சட்டத்தில் நிலம் வாங்குவதற்கு ’மாநிலத்தின் நிரந்தர குடியிருப்பாளர்’ என்ற நிபந்தனை தற்போது நீக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போது யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டுள்ள ஜம்மு காஷ்மீரில், வெளியாட்கள் முதலீடு செய்ய முடியும்.

அரசியல் சாசன பிரிவு 370 நடைமுறையில் இருந்தபோது, வெளியாட்கள் நிலத்தை வாங்க முடியாத நிலை இருந்ததால், மாநிலத்தின் வளர்ச்சி தடைபட்டதாக மத்திய அரசு கூறியுள்ளது.

இதேபோல், லடாக் யூனியன் பிரதேசத்திற்கும் நிலம் தொடர்பான சிறப்பு சட்டம் விரைவில் நிறைவேற்றப்பட இருப்பதாக தி இந்து கூறுகிறது.

“இந்தியாவின் மற்ற மாநிலங்களைப்போல ஜம்மு காஷ்மீரில் தொழிற்சாலைகள் அமைய வேண்டும். அமைதி, வளம், வளர்ச்சி என்பதில் என் அரசு உறுதியாக உள்ளது” என்று துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா கூறியுள்ளார்.

கல்வி மற்றும் சுகாதார திட்டங்களுக்கு, நிலத்தை மாற்றம் செய்வதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

‘விவசாய நிலங்கள், மாவட்ட ஆட்சியரின் அனுமதியின்றி வேறு தேவைகளுக்கு பயன்படுத்த முடியாது’ என்று சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டத்தின் புதிய விதிகளின்படி, கமாண்டர் அந்தஸ்துக்கு குறையாத ராணுவ அதிகாரி, எந்த ஒரு பகுதியையும், ராணுவத்தின் செயல்பாடு மற்றும் பயிற்சிக்காக, பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க முடியும் என்று தி இந்து கூறுகிறது.

மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய சட்டத்தை தொடர்ந்து, ‘உழுபவருக்கே நிலம் சொந்தம்’ என்பதை உறுதி செய்யும், ‘ஜம்மு காஷ்மீர் பெரும் பண்ணைகள் ஒழிப்புச் சட்டம்’ உட்பட 11 சட்டங்கள் காலவதியாகியுள்ளன.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு தேசிய மாநாடு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி உட்பட அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

“இந்த திருத்தங்கள் ஜம்மு காஷ்மீரை விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. இந்த புதிய சட்டங்கள் ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று தேசிய மாநாடு கட்சியின் துணை தலைவர் ஓமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் : உரிமையை மீட்க ஒன்றுகூடும் கட்சிகள்

“இது, ஜம்மு காஷ்மீர் மக்களின் உரிமைகளை பறிப்பதற்கு வடிவமைக்கப்பட்ட திட்டத்தின் மற்றொரு படி. அரசியல் சாசனத்தின் பிரிவு 370ஐ சட்டத்திற்கு புறம்பாக நீக்கியது ஜம்மு காஷ்மீரின் இயற்கை வளத்தை கொள்ளையடிப்பதற்கு வழிவகுக்கிறது. இறுதியில் நிலங்களை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இத்தகைய வெட்கக்கேடான நடவடிக்கைகள் ஜம்மு காஷ்மீரின் மூன்று பகுதியை சேர்ந்த மக்களும் ஒற்றுமையாக போராட வேண்டியதன் அவசியத்தை வலுப்படுத்தியுள்ளது” என்று மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெஹ்பூபா முஃப்தி தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்