Aran Sei

ஒன்றிணைந்த காஷ்மீர் தலைவர்கள் – நிரந்தர தீர்வுகோரி பிரகடனம் – கூட்டத்தை தவிர்த்த காங்கிரஸ்

காஷ்மீரை சேர்ந்த ஆறு பிராந்திய கட்சிகள் ஒன்றிணைந்து, “குப்கர் பிரகடனத்திற்கான மக்கள் கூட்டமைப்பு” என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர்.

மக்கள் மாநாட்டு கட்சியின் தலைவர் பாரூக் அப்துல்லா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெஹ்பூபா முக்தி, தேசிய மாநாட்டு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் உமர் அப்துல்லா, மக்கள் மாநாடு கட்சியின் சஜ்ஜத் லோன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் எம்.ஒய்.தாரிகாமி உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.

அவானி தேசிய மாநாடு கட்சி, ஜம்மு, காஷ்மீர் மக்கள் இயக்கம், அவாமி இத்திஹாத் கட்சி, மக்கள் ஜனநாயக முன்னணி ஆகிய அமைப்புகளும் இந்த கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ளன.

“2019 ஆகஸ்ட் 4-ம் தேதியில் இருந்த நிலையை மீட்டெடுப்பதே எங்கள் லட்சியம். இது, அரசியல் சாசன பிரிவு 370-ஐ ரத்து செய்வதற்கு முன்னர், லடாக் உட்பட ஜம்மு காஷ்மீர் மக்கள் அனுபவித்து வந்த உரிமையை மீட்டெடுக்கும் அரசியல் சாசன போர்” என்று கூட்டத்திற்குப் பிறகு பேசிய பாரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை மீட்பது என்று குறுக்கிக்கொள்ளாமல், காஷ்மீர் பிரச்சனைக்கு நிரந்திர தீர்வுகாண்பதை இந்த கூட்டமைப்பு இலக்காக கொண்டுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த கூட்டமைப்பில் லடாக் உட்பட காஷ்மீரின் அனைத்து பகுதிகளையும் சேர்ந்த பிரதிநிதிகளும் இணைக்கப்படுவார்கள் என்று கூறியுள்ள பரூக் அப்துல்லா, அடுத்த கூட்டம் விரைவில் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில் உடல்நிலையை காரணம்காட்டி, காங்கிரஸ் தலைவர் ஜி.ஏ.மிர் கலந்துகொள்ளவில்லை.

14 மாதங்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்த மெஹ்பூபா முஃப்தி புதன்கிழமையன்று விடுதலை செய்யப்பட்டார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்