Aran Sei

காஷ்மீரில் ஹிஸ்புல் கமாண்டர் சுட்டுக்கொலை – மிகப்பெரிய வெற்றி என போலீஸ் அறிவிப்பு

காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் கமாண்டர் சைஃபுல்லா கொல்லப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“காவல்துறைக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இது மிகப்பெரிய வெற்றி” என்று காஷ்மீர் ஐஜி விஜய் குமார் தெரிவித்துள்ளதாக கிரேட்டர் காஷ்மீர் இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

ஸ்ரீநகர், ரன்ங்ரெத் பகுதியில் ஹிஸ்புல் கமாண்டர் டாக்டர் சைஃபுல்லா மறைந்திருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, அந்த பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்ததாகவும், அப்போது திடீரென பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதை தொடர்ந்து இரு தரப்பிற்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை தொடங்கியதாக கிரேட்டர் காஷ்மீர் தெரிவித்துள்ளது.

“கடந்த மே மாதம் ரியாஸ் நைகூ கொல்லப்பட்டதை தொடர்ந்து சைஃபுல்லா கமாண்டர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்” என்று விஜய் குமார் தெரிவித்ததாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

என்கவுண்டர் நடைபெற்ற இடத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும், அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தி இந்து கூறுகிறுது.

என்கவுண்டர் நடைபெற்ற இடத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விஜய் குமார் “தகவல் கிடைக்கப்பட்டதை தொடர்ந்து அந்த பகுதி சுற்றி வளைக்கப்பட்டது. இரு தரப்பிற்கும் இடையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். எங்களுக்கு கிடைக்கும் தகவளின்படி கொல்லப்பட்டவர் சைஃபுல்லாதான் என்பது 95% உறுதி. எடை மீட்டுவருகிறோம், அது அடையாளம் காணப்படும்” என்று கூறியுள்ளார்.

என்கவுண்டர் நடைபெற்ற இடத்திலிருந்து ஆயுதங்களும், வெடி பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் வலைபின்னல் பலமடைந்திருப்பதாகவும், நகரத்திற்குள் யார் வந்தாலும் தகவல் கிடைத்து விடுவதாகவும் விஜய் குமார் தெரிவித்ததாக தி இந்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்