Aran Sei

“கர்நாடகாவில் மத மாற்ற தடைச்சட்டம் இயற்றப்படும்” – கர்நாடக பா.ஜ.க அமைச்சர் ரவி

The Hindu

ர்நாடகாவில் திருமணத்திற்காக மதம் மாறுபவரைத் தடுக்க மத மாற்ற தடைச்சட்டம் இயற்றப்படும் என்று கர்நாடக அமைச்சரும், பா.ஜ.க தேசியப் பொதுச்செயலாளருமான ரவி கூறியுள்ளார் .

உத்தரப்பிரதேசத்தின் முன்மாதிரியைப் பின்பற்றி கர்நாடகத்திலும் திருமணத்திற்காக மதம் மாறுபவர்களைத் தடைசெய்யும் விதமாக மதமாற்ற தடைச் சட்டத்தை அரசு இயற்றும் என்று கர்நாடக அமைச்சரும் பா.ஜ.க.தேசியப் பொதுச்செயலாளருமான ரவி தெரிவித்துள்ளார்.

“எங்கள் சகோதரிகளின் கௌரவத்திற்கு தீங்கு விளைவிக்கும் விதமாக ஜிகாதிகள் நடந்து கொண்டால் நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம்” என்றும் ”இச்சட்டத்தின் படி தண்டனைகள் கடுமையாகவும் விரைவாகவும் வழங்கப்படும்”  “இயற்றப்படும் சட்டம் அலகாபாத் உயர்நீதி மன்றத்தின் வழிகாட்டுதலின் படி இயற்றப்படும்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத் “லவ் ஜிகாத்திற்கு எதிராகக் கடுமையான சட்டங்கள் இயற்றப்படும்” என்று தெரிவித்த மூன்று நாள் கழித்து, கர்நாடக அமைச்சர் ரவி இதை கூறியுள்ளார்.

இது குறித்து பொதுக்கூட்டத்தில் பேசிய யோகி ஆதித்யனாத் ”மாநிலத்தில் இந்துப் பெண்களைப் பாதுகாக்க லவ் ஜிகாத்துக்கு எதிராகவும் கடுமையான சட்டம் இயற்றப்படும். எங்கள் சகோதரிகளின் அடையாளத்தையும் பெருமையையும் மாண்பையும் குலைக்கும் வகையில் செயல்படுவோருக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். அவ்வாறு தொடர்ந்து எங்கள் சகோதரிகளுக்கும், பெண்களுக்கும் இடையூறு விளைவிப்போருக்கு இறுதி ஊர்வலம் நடத்த வேண்டியது இருக்கும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் யோகி ஆதித்யநாத் தன்னுடைய உரையில்,  நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒன்றையும் சுட்டிக் காட்டி பேசினார். அவர் குறிப்பிட்ட சம்பவத்தில், திருமணம் முடிந்த இணையர்கள் போலீஸ் பாதுகாப்புக் கோரி நீதிமன்றத்தில் முறையிட்ட போது அலகாபாத் உயர்நீதிமன்றம் அம்மனுவை நிராகரித்தது.  மனு நிராகரிக்கப்பட்டதன் காரணம் பெண் பிறப்பால் முஸ்லீம் என்றும் திருமணம் நிகழ்ந்த ஒரு மாதத்திற்கு முன் அவர் இந்துவாக மதம் மாறி இருக்கிறார் அதனால் போலீஸ் பாதுகாப்பு வழங்க முடியாது என்று நீதிமன்றம் சொன்னதை யோகி சுட்டிக் காட்டினார் .

திருமண நோக்கத்திற்காக மதம் மாறுவது ஏற்றுக்கொள்ள முடியாது என்று 2014 ஆம் ஆண்டு நூர்ஜகான் பேகம் என்கிற அஞ்சலி மிஸ்ரா வழக்கிலும் நீதிமன்றம் இதையே கூறியுள்ளது . பா.ஜ.க.வின் தேசியப் பொதுச்செயலாளரான ரவியும் அலகாபாத் உயர்நீதிமன்றம் சொன்ன கருத்தை சுட்டிக்காட்டியுள்ளார்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்