Aran Sei

கர்நாடகா பாஜக அமைச்சர் பாலியல் முறைகேடு – புகாரை திரும்பப் பெறுவதாக குற்றம் சாட்டியவர் மனு

Image credit : thehindu.com

ர்நாடகா அமைச்சர்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் புதிய திருப்பமாக, குற்றம் சாட்டியவரான தினேஷ் கல்லஹல்லி வழக்கை திரும்பப் பெறுமாறு போலீஸில் மனு தாக்கல் செய்துள்ளதாக தி ஹிந்து செய்தி தெரிவிக்கிறது.

கர்நாடகா அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி, அரசு வேலை வாங்கித் தருவதாக வாக்குறுதி அளித்த பிறகு பாலியல் ரீதியாக துன்புறுத்திய, பெண்ணுடனான நெருக்கமான காட்சிகளை காட்டும் குறுந்தகடு வெளியானதைத் தொடர்ந்து பதவி விலக நேரிட்டது.

அமைச்சர் மீது பாலியல் குற்றச்சாட்டு: செய்தி வெளியிடுவதற்கு முன் ஆதாரங்களை சரி பாருங்கள்- ஊடகங்களை கண்டித்த பெங்களூரு நீதிமன்றம்

சமூக செயல்பாட்டாளரான தினேஷ் கல்லஹல்லி, தனது வழக்கறிஞர் மூலமாக புகாரை திரும்பப் பெறும் மனுவை தாக்கல் செய்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் சமூக ஊடகங்களில் ஒரு “குற்றவாளி”யாக பார்க்கப்படுவதாலும், முன்னாள் முதல்வர் எச்.டி குமாரசுவாமி இந்த குறுந்தகடு விவகாரத்தில் ரூ 5 கோடிக்கான திட்டம் உள்ளது என்று கூறியது தன்னை புண்படுத்தியதாலும் புகாரை திரும்பப் பெறுவதாக அவர் கூறியுள்ளார்.

தான் தினேஷ் கல்லஹல்லியின் பெயரைக் குறிப்பிடவோ, அவர் இந்த முறைகேடு தொடர்பாக பண ஆதாயம் தேடுவதாக கூறவோ இல்லை என்று குமாராசுவாமி தெளிவுபடுத்தியுள்ளார்.

அவரது முடிவுக்கு பின் இருக்கும் காரணங்களை உறுதி செய்து கொள்ள, தினேஷ் கல்லஹல்லி விசாரணை அதிகாரியின் முன்பு வருமாறு அழைக்கப்படுவார் என்று ஒரு மூத்த போலீஸ் அதிகாரி கூறியுள்ளார்.

“இந்த வழக்கு இன்னும் வழக்கு பதிவு செய்ய முடியாத அறிக்கை என்ற வகையில் கையாளப்படுகிறது. சம்பந்தப்பட்ட பெண்ணை தேடும் முயற்சி தொடர்கிறது. போலீஸ் நிலைய மட்டத்தில் வழக்கு குறித்து முடிவெடுக்க வேண்டியவர் விசாரணை அதிகாரிதான் என்றாலும், விசாரணையை தொடரவும், பெண்ணின் வாக்குமூலத்தை பதிவு செய்யவும் போலீஸ் முடிவு செய்திருக்கிறது” என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறியுள்ளதாக தி ஹிந்து தெரிவிக்கிறது.

“ஒரு பொறுப்புள்ள குடிமகனாக புகார் பதிவு செய்து நான் என் கடமையைச் செய்து விட்டேன். இதற்குப் பிறகு போலீஸ்தான் முடிவு செய்ய வேண்டும். புகாரை திரும்பி வாங்குவதால், நான் பின்வாங்கி விட்டேன் என்று பொருள் இல்லை. எனக்கு எதிராக வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை நான் சட்டரீதியாக எதிர்கொள்வேன். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வேன்” என்று தினேஷ் கல்லஹல்லி கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்