Aran Sei

குடியுரிமைத் திருத்தச் சட்டம் : ‘உள்துறை அமைச்சகம் உரிய பதில் அளிக்கும்’ – பாஜக தேசியத் தலைவர்

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை, பாஜக உறுதியாக நடைமுறைப்படுத்தும் என்று பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

நேற்று (ஜனவரி 9), பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா  மேற்கு வங்கத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். பர்தமான் மாவட்டத்தில் பேரணி மேற்கொண்ட அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுமா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேற்கு வங்க தேர்தல் – சிஏஏ குறித்து அடக்கி வாசிக்கும் அமித் ஷா – ஆள் பிடிக்கும் வேலையில் இறங்கியுள்ள பாஜக

அதற்கு பதில் அளித்த அவர், “பாஜக கூறியபடி குடியுரிமைத் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும். அதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டு வருகின்றன. இதை நடைமுறைப்படுத்த உறுதிபூண்டுள்ளோம். அதற்கான காலக்கெடு இன்னும் உறுதியாகவில்லை. அதுகுறித்து உள்துறை அமைச்சகம்தான் உரிய பதில் அளிக்கும்.” என்று கூறியுள்ளதாக தி இந்து தெரிவித்துள்ளது.

‘சிஏஏ-என்ஆர்சி-க்கு எதிராக போராடுபவர்களை வேட்டையாடுகிறார்கள்’ – கேம்பஸ் ஃப்ரண்ட் குற்றச்சாட்டு

அதைத் தொடர்ந்து, மேற்கு வங்கத்தில் ஒருவேளை பாஜக ஆட்சிக்கு அமைத்தால், லவ் ஜிகாத்துக்கு எதிராக சட்டம் கொண்டுவரப்படுமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு நேரடியாக பதில் அளிக்க நட்டா மறுத்துள்ளார். மாறாக, “ நாங்கள் ஊடுருவல்காரர்களுக்கு எதிரானவர்கள்.” என்று தெரிவித்ததாக தி இந்து குறிப்பிட்டுள்ளது.

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்