Aran Sei

ஃபேஸ்புக், ட்விட்டருக்கு நாடாளுமன்ற கூட்டுக் குழு சம்மன் – அதிகாரிகள் ஆஜராக உத்தரவு

Image Credits: Indus Scrolls

மூக ஊடக நிறுவனங்களான ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டருக்கு நாடாளுமன்றத்தின் கூட்டுக் குழு ‘தரவுகளைப் பாதுகாத்தல் மற்றும் அதன் தனியுரிமை’ தொடர்பான விசாரணைக்காக சம்மன் அனுப்பியுள்ளது என்று ‘பிடிஐ’ செய்தி வெளியிட்டுள்ளது.

மக்களவை செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் மீனாட்சி லேகி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள 2019-ம் ஆண்டுத் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா மீதான கூட்டுக் குழுவின் முன், ஃபேஸ்புக் இந்தியாவின் பிரதிநிதிகள் ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அதேபோல், ட்விட்டர் நிறுவனத்தின் அதிகாரிகள் அக்டோபர் 28-ம் தேதி இக்குழு முன் ஆஜராகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இதே பிரச்சினை தொடர்பாக அமேசான் மற்றும் கூகுள் அதிகாரிகளை வரவழைப்பதும் நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் தீவிரப் பரிசீலனையில் உள்ளது என இச்செய்தி குறிப்பிடுகிறது.

“தரவைப் பாதுகாத்தல் மற்றும் அதன் தனியுரிமை தொடர்பான பிரச்சனையில், தேவைப்பட்டால் தனி நபரோ அல்லது நிறுவனமோ குழுவின் முன் ஆஜர் படுத்தப்பட்டு அதன் சமூக ஊடக தளங்கள் முழுமையாக ஆராயப்படும்,” என்று மீனாட்சி லேகி கூறியுள்ளதாக ‘தி இந்து’ வில் செய்தி வெளியாகியுள்ளது.

“சமூக ஊடக நிறுவனங்களை அழைத்துள்ளதை அரசியல் ரீதியாகப் பார்ப்பது பொருத்தமற்றது மற்றும் நியாயமற்றது. இந்தக் குழுவில் பல அரசியல் காட்சிகளில் இருந்தும் பிரதிநிதிகள் உள்ளனர். இந்த மசோதா தொடர்பான விவாதங்கள் தேசிய நலன்களின் பார்வையில் நடத்தப்படுகின்றன,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், மத்திய அரசு அக்டோபர் 22-ம் தேதி சமூக ஊடகத் தளத்தின் இருப்பிட அமைப்புகள், ஜம்மு-காஷ்மீரின் லே – வை, சீனாவின் ஒரு பகுதியாகக் காட்டிய ட்விட்டரை எச்சரித்தது. நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கும் எதிரான அவமதிப்பு முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் கூறியது.

‘லே’ சீனாவுக்கு சொந்தமா? – டிவிட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம்

தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் செயலாளர் அஜய் சாவ்னி, ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சிக்கு எழுதியுள்ள கடிதத்தில், நாட்டின் உணர்வுகளை மதிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

யூனியன் பிரதேசமான லடாக்கில் உயிரிழந்த வீரர்களுக்கு லே-ன் புகழ் அரங்கு எனும் போர் நினைவகத்திலிருந்து நடைபெற்ற ஒரு நேரடி ஒளிபரப்பில் ட்விட்டர், இந்திய பிரதேசமான “ஜம்மு & காஷ்மீர்”-ஐ “மக்கள் சீனக் குடியரசு”-ன் பகுதியாகக் காட்டியது.

கடந்த மாதம், மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஃபேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க்கு எழுதிய கடிதத்தில், ஃபேஸ்புக்கின் இந்திய ஊழியர்கள், அடுத்தடுத்த தேர்தல்களில் தோல்வியடைந்த அரசியல்வாதிகளுக்கு ஆதரவாகவும், பிரதமர் மற்றும் மூத்த அமைச்சர்களை “சாடுபவர்களுக்கு” ஆதரவாகவும் உள்ளனர் என்று குற்றம் சாட்டினார்.

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சஷி தரூர் தலைமையில் தகவல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவும் ஃபேஸ்புக் அதிகாரிகளை அதன் ‘வெறுக்கத் தக்கப் பேச்சு’ (hate speech) விதிகளை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறி சம்மன் அனுப்பியுள்ளது என்று தி ஹிந்து செய்தி தெரிவிக்கிறது.

முன்னதாக, ஃபேஸ்புக் இந்தியாவின் பொதுக் கொள்கை தலைவர் அங்கி தாஸ், பாஜக கட்சியின் உறுப்பினர்கள் வெளியிட்ட ‘வெறுப்பு கருத்தை’ அகற்றத் தவறியதாகவும், அதனால் தலைநகரான டெல்லியில் கலவரங்கள் வெடித்ததாகவும் ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ செய்தி வெளியிட்டது.

கலவரத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் இறந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் இஸ்லாமியர்கள். பல இஸ்லாமியர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.

டெல்லி வன்முறை : இசுலாமியர்களுக்கு எதிராக போலீஸ் பாரபட்சம்

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்