மேற்கு வங்க மாநிலத்தில் பழங்குடியினர் அதிகம் வாழும் ஜங்கல்மஹால் பகுதியில், மாவோயிஸ்ட்டுகளின் வன்முறை காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதி உதவி மற்றும் அரசு வேலைவாய்ப்பு நிவாரணமாக வழங்கப்படும் என்று மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
மாவோயிஸ்ட்டுகளின் வன்முறை காரணமாக உயிரிழந்த அல்லது பத்து ஆண்டுகளுக்கு மேல் காணாமல் போனவர்களின் குடும்பத்தினருக்கு 4 லட்சம் ரூபாய் நிவாரணத்தொகை வழங்கப்படும் என்றும் குடும்பத்தில் ஒருவருக்கு ஊர்க்காவல் படையில் வேலை வழங்கப்படும் என்றும் மம்தா பானர்ஜி உறுதியளித்துள்ளார்.
காட்டு யானைகளால் கொல்லப்படுபவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கும் வேலை வழங்கப்படும் என்று மம்மதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசால் செயல்படுத்தப்படும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் குறித்து பேசும் போதும், ஏற்கனவே மாநில அரசு சுவஸ்தி சாதி என்ற சுகாதார திட்டத்தை செயல்படுத்தி வருவதை குறிப்பிட்ட அவர், மத்திய அரசு முழு நிதியையும் வழங்கினால் ஆய்ஷ்மான் பாரத் திட்டத்தை செயல்படுத்த தயார் என்று கூறினார்.
உலகிலேயே மிகப்பெரிய சுகாதார திட்டம் என்று கூறப்படும், ஆயுஷ்மான் திட்டம் மத்திய அரசின் 60 சதவீத நிதி மற்றும் மாநில அரசின் 40 சதவிதி நிதியுடன் செயல்படுத்தப்படும் திட்டம் ஆகும்.
(செய்தி ஆதாரம் : PTI)
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.