Aran Sei

ஜம்மு காஷ்மீரில் பாஸ்போர்ட், அரசு வேலை பாதுகாப்பு அனுமதிக்கு புதிய கட்டுப்பாடு – ஜம்மு காஷ்மீர் குற்றவியல் புலனாய்வு துறை அறிவிப்பு

ம்மு காஷ்மீரில் ‘சட்டம் ஒழுங்கு, கல்வீச்சு அல்லது பாதுகாப்பிற்கு எதிரான குற்றங்கள்” ஆகியவற்றில் ஈடுபடும் எந்தவொரு தனிநபருக்கும் பாஸ்போர்ட் மற்றும் அரசு வேலைகளுக்கான நற்சான்றிதழ் அளிக்கப்பட மாட்டாது என ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் குற்றவியல் புலனாய்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக கடந்த சனிக்கிழமை மூத்த காவல் கண்காணிப்பாளர் அமோத் அசோக் நாக்புரே வெளியிட்டிருக்கும் சுற்றறிக்கையில், ஜம்மு காஷ்மீருக்கு பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவும், கல் ஏறிதல் போன்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள்குறித்து ஆராய கள அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.

”பாஸ்போர்ட் சேவை அல்லது அரசு தொடர்பான எந்த சரிபார்ப்பு பணியை மேற்கொள்ளும்போது விண்ணப்பதாரர் சட்டம் ஒழுங்கு, கல்வீச்சு மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் செயலில் ஈடுபட்டுள்ளனரா என கவனிக்க வேண்டும் மற்றும் உள்ளூர் காவல்நிலைய பதிவுகளில் இருந்து உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்” என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக ஓங்கியொலித்த குரல்- ஒலிம்பிக் போட்டியின் பதக்க மேடையில் போராடிய கறுப்பின வீராங்கனை

மேலும், “காவல்துறை, பாதுகாப்பு படை மற்றும் பாதுகாப்பு முகமைகளின் பதிவுகளில் இருக்கும் சிசிடிவி காட்சிகள், புகைப்படங்கள், வீடியோக்கள, ஆடியோ கிளப்கள் போன்ற டிஜிட்டல் ஆதாரங்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

”இது போன்ற எந்தவொரு வழக்குகளிலும் தொடர்புடைய எந்தவொரு தனிநபருக்கும், பாஸ்போர்ட் அல்லது அரசாங்க வேலைக்கான சரிபார்ப்பில் நற்சான்றிதழ் வழங்க கூடாது” என அந்த சுற்றிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

வெளியேற்றப்படும் சென்னை மக்கள் – வரலாற்றின் படிப்பினை என்ன?

ஜம்மு காஷ்மீரில் அரசு பதவியில் புதிதாக நியமிக்கப்படுவதற்கு முன்பு காவல்துறையின் புலனாய்வு பிரிவிடம் இருந்து பாதுகாப்பு அனுமதி பெறுவது கட்டாயமாகும்.

கடந்த  காலங்களில், பலருக்கு பாதுகாப்பு அனுமதி மறுக்கப்பட்டு, அவர்கள் அரசு வேலைக்கு தகுதியற்றவர்களாக உள்ளனர்.

தனிநபர்களின் அரசியல் சித்தாந்தம், பிரிவினைவாதம் அல்லது அரசுக்கு எதிரான எதிர்ப்புகளில் ஈடுபட்டதற்காக பாஸ்போர்டிற்கான பாதுகாப்பு அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில், பகிரங்கமாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை.

Source : Indian Express 

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்