Aran Sei

ஜியோ கோபுரங்கள் பாதிப்பு – பதறும் ரிலையன்ஸ், பாதுகாப்பு கொடுக்கும் போலீஸ்

Image Credit : Indian Express

ஞ்சாபில் ரிலையன்சின் ஜியோ மொபைல் கோபுரங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து வருவதைத் தொடர்ந்து மாநில அரசு நிர்வாகம் பதற்றமடைந்துள்ளது என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜியோ கோபுரங்களுக்கு மின்சாரத்தை துண்டிக்கும் விவசாயிகள் – தவிர்க்குமாறு சங்கங்கள் கோரிக்கை

“மொபைல் கோபுரங்களுக்கு சேதம் விளைவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி போலீசுக்கு உத்தரவிட்டுள்ளதாக பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் நேற்று கூறியுள்ளார். “யாரும் சட்டத்தை தம் கையில் எடுப்பதை அனுமதிக்க முடியாது” என்றும், நிலைமை இப்போது கட்டுக்குள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சுமார் 2,000 ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் மொபைல் கோபுரங்களுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து, போலீஸ் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பரவலாகச் சென்று அவற்றுக்கு மின் இணைப்பை மறுபடியும் கொடுக்க ஏற்பாடு செய்து வருவதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவிக்கிறது.

பாதிக்கப்பட்ட கோபுரங்களில் பெரும்பாலானவை, பதிந்தா, மான்சா, நவான்ஷர், தரன் தரன், பதாலா, ஜலந்தர், அம்ரித்சர், ஹோஷியார்பூர், ஃபெரோஸ்பூர் ஆகிய 10 மாவட்டங்களில் உள்ளன.

2,000 கோபுரங்களும், பல அலைவாங்கும் நிலையங்களும், கண்ணாடி இழை கம்பிகளும் (fiber optic cables) சேதப்படுத்தப்பட்டுள்ளன என்று ஜியோ கூறினாலும், பெரும்பாலான நிகழ்வுகளில் கோபுரங்களுக்கு சேதம் மிகக் குறைவாகவே ஏற்பட்டுள்ளது என்று போலீஸ் தெரிவித்துள்ளது. கிராம பஞ்சாயத்து உறுப்பினர்களின் ஆதரவோடு இந்த கோபுரங்களை குறி வைத்த உள்ளூர் இளைஞர்கள், கோபுரங்களுக்கான மின் இணைப்பை மட்டுமே துண்டிக்கின்றனர் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட போலீஸ் தலைமை அதிகாரிகள், மொபைல் கோபுரங்களை பாதுகாப்பதற்கான சிறப்பு ரோந்து படைகளை ஏற்படுத்தியுள்ளனர். பெரும்பாலான மாவட்டங்களில், 80%-க்கும் அதிகமான பாதிக்கப்பட்ட கோபுரங்களை மீண்டும் செயல்பட வைத்து விட்டதாக போலீஸ் கூறியுள்ளது.

இந்த வழக்குகளில் போலீஸ் இதுவரை எந்த முதல் தகவல் அறிக்கையையும் தாக்கல் செய்யவில்லை என்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ்.

60 மொபைல் கோபுரங்களுக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட பதிந்தா மூத்த காவல் கண்காணிப்பாளர் பூபிந்தர்ஜித் விர்க், “கோபுரங்ககளுக்கு எந்த சேதமும் இருப்பதாக தகவல் கிடைக்கவில்லை. எனவே, முதல் தகவல் அறிக்கை எதையும் பதிவு செய்யவில்லை. 29 கோபுரங்களுக்கு மின் இணைப்பு தரப்பட்டு விட்டது” என்று கூறியுள்ளார்.

சங்ரூர் மூத்த காவல் கண்காணிப்பாளர் விவேக் ஷீல் சோனி, “கட்டமைப்பு எதற்கும் சேதம் இல்லாததால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை. மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட 70 மொபைல் கோபுரங்களில் 49-க்கு இணைப்பு கொடுக்கப்பட்டு விட்டது” என்று கூறியுள்ளார்.

`ஜியோவைப் புறக்கணியுங்கள்’-பஞ்சாப் விவசாயிகள் போராட்டம்

மூத்த அரசு அதிகாரிகளையும் போலீஸ் அதிகாரிகளையும் சந்தித்த ஜியோ தலைமை நிர்வாகிகள் தமது மொபைல் கோபுரங்களுக்கும் பிற உள்கட்டமைப்புகளுக்கும் பாதுகாப்பு கோரியுள்ளனர்.

“பாதிக்கப்பட்ட கோபுரங்களை சரிசெய்யச் சென்ற எங்களது ஊழியர்கள் பல இடங்களில் திரும்ப வேண்டி வந்தது. எனவே, மாநில அரசிடம் பாதுகாப்பு கோரியுள்ளோம். ஏனென்றால், தொலைதொடர்பு அத்தியாவசிய சேவையின் கீழ் வருகிறது” என்று அவர்கள் கூறியுள்ளனர்.

பஞ்சாபில் உள்ள ஜியோ நிறுவனத்தின் 9000 மொபைல் கோபுரங்களில் சுமார் 1,800 கோபுரங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் தொலைபேசி அழைப்புகளின் தரமும், 4ஜி இணைய இணைப்பு வேகமும் பாதிக்கப்படும் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவிக்கிறது.

கண்ணாடி இழை கம்பிகளுக்கு ஏற்பட்ட சேதத்தை சரி செய்ய அதிக செலவு பிடிக்கும். ஏனென்றால் அவற்றை முழுவதுமாக மாற்ற வேண்டியிருக்கும் என்று ஒரு ஜியோ மேலாளர் கூறியுள்ளார்.

ஜியோ சேவையிலிருந்து மாறும் இயக்கம் – பஞ்சாபிலும், போராட்டக் களத்திலும், பிற மாநிலங்களிலும் தீவிரம்

போராடும் விவசாய சங்கங்கள், விவசாயிகளின் கவனம் ஜியோ சேவையை புறக்கணிப்பதில் இருக்க வேண்டுமே தவிர, அதன் உள்கட்டமைப்பை பாதிப்பதில் இருக்கக் கூடாது என்று மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளன.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்