Aran Sei

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவிக்கு பிணை மறுப்பு – குற்றச்சாட்டிற்கு முகாந்திரம் இருப்பதாக நீதிபதி கருத்து

ட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (UAPA), கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் பிஞ்சரா டோட் உறுப்பினரும் ஜேஎன்யூ மாணவியுமான தேவங்கனா கலிதாவிற்கு பிணை வழங்க முடியாது  டெல்லி அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தின் மகளிரியில் கல்வியில் மையத்தில், இளம் முனைவர் பட்ட ஆராய்ச்சியாளராகப் பயன்று வருபவர், ’பிஞ்சரா டோட்’  அமைப்பின் உறுப்பினரான தேவங்கனா கலிதா. 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், குடியுரிமை திருத்தச் சட்டதிற்கு எதிரான போரட்டத்தின்போது ஜஃபராபாத் என்ற இடத்தில்  ஏற்பட்ட கலவரத்தில் தொடர்பிருப்பதாக டெல்லி காவல்துறையினர் 2020 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கில் அவருக்கு மறுதினமே நீதிமன்றம் பிணை வழங்கியது.

போக்சோ சட்டத்திற்கு புதிய விளக்கமளித்த நீதிபதி: மீண்டும் சர்ச்சையில் மும்பை உயர்நீதி மன்றம்

இதனையடுத்து 2019 ஆண்டு, தரியா கஞ்ச் பகுதியில் ஏற்பட்ட கலவரத்தில் தொடர்பிருப்பதாக, 2020 ஆம் ஆண்டு மே 30 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கிலும் அவருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் பிணை வழங்கியது.

கலிதாவிற்கு வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்யுமாறு டெல்லியில் காவல்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிபதிகள் அசோக் பூஷன், ஆர்.சுபாஷ், எம்.ஆர் ஷா அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தலையிட முடியாது என்றதோடு, ஜாமீனை உறுதி செய்தி தீர்ப்பளித்தது.

பாபர் மசூதிக்கு கீழே, கோவிலைக் கண்டுபிடித்தவருக்கு பத்ம விபூஷன் – யார் இந்த பி.பி.லால்?

இதன்பிறகு மத கலவரத்தைத் தூண்டி குற்றச்சாட்டின் கீழ் கலிதாவை சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தில் காவல்துறையிர் கைது செய்தனர்.

இந்த வழக்கில் பிணை வழங்கக் கோரி கலிதா டெல்லி அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். வழக்கை விசாரித்தை கூடுதல் அமர்வு நீதிபதி அமிதாப் ராவத், கலிதா மீதான குற்றச்சாட்டிற்கு முகாந்திரம் இருப்பதால், பிணை வழங்க முடியாது எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Sources : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்