Aran Sei

ஓரணியில் ஜம்மு காஷ்மீர் அரசியல் கட்சிகள் – மாவட்ட கவுன்சில் தேர்தலில் போட்டி

நீக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை மீட்டெடுப்பதற்காக உருவாக்கப்பட்ட குப்கர் கூட்டணி,நடைபெற இருக்கும் மாவட்ட மேம்பாட்டு கவுன்சில் (டி.டி.சி) தேர்தலில் போட்டியிட உள்ளது.

குப்கர் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜம்மு-காஷ்மீரின் ஏழு முக்கிய அரசியல் கட்சிகள் சனிக்கிழமையன்று மத்திய பிராந்தியத்தில் நடைபெறவிருக்கும் மாவட்ட மேம்பாட்டு கவுன்சில் (டி.டி.சி) தேர்தலில் ஒருங்கிணைந்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளன.

காலியாக உள்ள பதவிகளுக்குத் தேர்தல் டிசம்பர் மாதத்தில் எட்டு கட்டங்களாக நடைபெற போவதாக ஜம்மு – காஷ்மீர் தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

கூட்டணியின் செய்தித் தொடர்பாளர் சஜாத் கனி லோன் கூறுகையில் “நிகழ்ச்சி நிரலின் ஒருபகுதியாக, வரவிருக்கும் டி.டி.சி தேர்தல் இருக்கிறது. இந்தத் தேர்தலை நாங்கள் ஒற்றுமையாகப் சந்திப்போம் என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது” என்று அவர் தெரிவித்ததாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

குப்கர் கூட்டமைப்பின் விதிப்படி  பரூக் அப்துல்லா வேட்பாளர்களின் பெயர்களை வெளியிடுவார் என்றும் அவர் கூறியுள்ளார்.

முன்னதா நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவர்  ஒமர் அப்துல்லா மற்றும் மார்க்சிஸ்ட் கம்ம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் எம்.ஒய் தரிகாமி  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்