Aran Sei

இந்திராவின் நெருக்கடி நிலை பிரகடனம் சட்டவிரோதமானதா? – ஆராயும் உச்சநீதிமன்றம்

ந்திரா காந்தி பிரதமராக இருந்த போது நாட்டில் நெருக்கடிநிலையைப் (Emergency) பிரகடனப்படுத்தினார். இந்த நிகழ்வு முடிந்து நாற்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, நெருக்கடிநிலை கொண்டுவந்ததை அரசியலமைப்பிற்கு விரோதமானது என அறிவிப்பது சாத்தியமா என உச்சநீதிமன்றம் ஆராயப் போவதாக லைவ்லா இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

94 வயதான வீணா சரின்,1975ல் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டதால், தான் சந்தித்த துயரங்களுக்கு ஈடாக, அரசின் அந்த நடவடிக்கை அரசியலமைப்பிற்கு விரோதமானது என அறிவிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டதால் தானும் தன் கணவரும் நாட்டைவிட்டு செல்ல கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், அவருடைய சொத்துக்கள் எல்லாம் கைப்பற்றப்பட்டதால் உண்டான மன அழுத்தத்தில், கணவர் உயிரிழந்ததாகவும் வீணா மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

ஜீவனாம்சம் வழங்குவது குறித்து உச்சநீதி மன்றம் அதிரடி தீர்ப்பு

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சஞ்சய் கிசான் கௌல் தலைமையிலான நீதிபதிகளின் அமர்வு, முதலில் இந்த மனுவை ஏற்க தயங்கியது. பின்னர், நீதிபதி கௌல் “வரலாற்றில் நாற்பது வருடங்களுக்கு முன் நடந்ததை இப்போது எதற்காக கையில் எடுக்க வேண்டும்? இந்த மனுவை விசாரிப்பது சிக்கலாக இருக்கிறது” என மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சல்வேயிடம் தெரிவித்ததாக லைவ்லா  செய்தி வெளியிட்டுள்ளது.

‘பெண்களின் உரிமைகளைப் பொறுத்தே சமூகம் முன்னேற்றம் அடையும்’ – உச்சநீதி மன்றம்

அதற்கு பதலளித்த ஹரிஷ் சல்வே, “திருத்தங்களை செய்வதற்காகச் சில தருணங்களில் நாம் வரலாற்றுக்கு மீண்டும் பயணித்தாக வேண்டும். அது போன்ற ஒரு விஷயம்தான் நெருக்கடி நிலை காலம். போர் குற்றங்கள் எல்லாம் இப்போது விசாரிக்கப்படுகின்றன. ஜனநாயகத்தின் உரிமைகள் நெருக்கடிநிலை காலத்தால் 19 மாதங்கள் பறிக்கப்பட்டுள்ளது. இதைக் குறித்து நம் தலைமுறையினர் படிப்பார்கள். இது ஒரு அரசியல் விவாதம் அல்ல. மனுதாரர் அரசியல்வாதி அல்ல, நெருக்கடிநிலை காலத்தால் பாதிக்கப்பட்ட ஒரு நபர். நாட்டில் கொண்டுவரப்பட்ட நெருக்கடி நிலை சட்ட விரோதமானது என உச்ச நீதிமன்றம் அறிவிக்க வேண்டும்” என்று கூறியதாக லைவ் லா தெரிவிக்கிறது.

பெண்கள் பதிலடி கொடுக்காதது தான் துன்புறுத்தலுக்கு காரணம் – உச்சநீதிமன்ற அமர்வு

இதைத் தொடர்ந்து , “45 வருடங்கள் கழித்து இந்த பிரச்சினையை மீண்டும் தொடங்குவது சரியானதா எனத் தெரியவில்லை. ஆனால், இவ்வளவு காலம் கழித்து அவசர காலத்தை சட்டவிரோதமானது என அறிவிப்பது சாத்தியமா என நீதிமன்றம் ஆராயும்” என்று நீதிபதிகளின் அமர்வு தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

’முஸ்லீம்கள் மீது வெறுப்பை பரப்புவதா?’- உச்சநீதி மன்றம் கேள்வி

தற்போது தாக்கல் செய்துள்ள மனுவில் இருபத்தைந்து கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டிருக்கும் வீணா, பணத்திற்காக வழக்கு பதிவு செய்ய விரும்பவில்லை என்றதால், மனுவை திருத்தி சமர்பிக்கும்படி நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்