Aran Sei

பத்திரிக்கையாளர் நேஹா தீக்‌சித் வீடு தாக்கப்பட்ட விவகாரம் – சர்வதேச பத்திரிகையாளர் அமைப்பு கண்டனம்

த்திரிக்கையாளர் நேகா தீக்‌சித் வீடு தாக்கப்பட்டதை எச்சரிக்கை சமிக்கையாகக் கருதி, அவருக்குக் காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என ரிப்போர்ட்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ்  (ஆர்எஸ்எஃப்) அமைப்புக் கோரிக்கை விடுத்துள்ளது.

நேகா தீக்‌ஷித்தை, தொடர்ந்து ஐந்து மாதங்களாகப் பின் தொடர்ந்தவர்கள், அவருக்கு மிரட்டல் அழைப்புகளை விடுத்து வந்த நிலையில், இந்தத் தாக்குதல் சம்பவம் நடைபெற்று இருப்பதால், நேகா தீத்சித்திற்கு பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு வழங்க வேண்டுமென ஆர்எஸ்எஃப் அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

ஆர்எஸ்எஃப் அமைப்பிடம் பேசிய தீக்‌சித், “நான் வீட்டை விட்டுப் பால்கனிக்கு வந்தபொழுது, என்னைத் தொலைபேசியில் அழைத்த மர்ம நபர், ’நீ பால்கனியில் நின்று கொண்டு இருக்கிறாய், நீ உன்னைப் பெரிய பத்திரிக்கையாளர் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாயா?, உன் முகத்தில் ஆசிட் விசுவேன். மற்றொரு முறை அழைத்த மர்ம நபர்கள், ‘ உன் கணவர் வீட்டில் இல்லை, நீ உன் நண்பர்கள் வீட்டில் இருக்கிறாய், நான் உன்னைப் பாலியல் வன்கொடுமை செய்து, உன் நிர்வாண உடலைச் சாலையில் வீசிவிடுவேன்” என கூறியதாக தி வயர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல், நாள் ஒன்றிற்கு ஐந்து முதல் ஆறு அழைப்புகள் வரத் தொடங்கியது எனக்கூறியுள்ள தீக்‌சித் “இரண்டு அல்லது மூன்று குரல்கள், நூற்றுக்கணக்கான எண்களிலிருந்து அழைக்கின்றன” என அவர் குறிப்பிட்டதாக  அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் போராட்டம் குறித்து கட்டுரை எழுதிய ’தி வயர்’ செய்தியாளர்: வழக்குப் பதிவு செய்த உத்திர பிரதேச காவல்துறை

“இந்த முயற்சியின் முழு புள்ளியும் எனது வேலையைப் பாதிக்கும் வகையில் என்னைத் துன்புறத்துவதாகும். இது எதன் உடனடி தூண்டுதல் எனத் தெரியவில்லை. நான் எழுதிய குறிப்பிட்ட அறிக்கையுடன் தொடர்புடையதா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் எதிரில் பேசுபவர்கள் வரிக்கு வரி நிருபர் என அழைக்கின்றனர்” எனத் தீக்சித் கூறியதாக தி வயர் தெரிவித்துள்ளது.

தீக்சித்தின் நண்பரும், ஆவணப்பட தயாரிப்பாளருமான நகுல் சிங் சாவ்னியும் அச்சுறுத்தல்களுக்கு இலக்காகியுள்ளதாகவும், 2013 ஆம் ஆண்டு முசாபர் நகரில் நடைபெற்ற கலவரம் தொடர்பான நகுல் சிங் சாவ்னியின் ஆவணப்படம் வெளியானதிலிருந்து, ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் அமைப்பான ஏபிவிபி உறுப்பினர்களால் சாவ்னி இலக்காகியிருப்பதாகவும்,  ஆர் எஸ்எஃப் அமைப்பு தெரிவித்திருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிகழும் சம்பவங்கள் அனைத்தும் நேகா தீக்சித் மற்றும் அவரது நண்பர் குறிவைக்கப்பட்டதை காட்டிருப்பதாகவும், அதன் எச்சரிக்கை சமிக்கையாகவே நேகாவின் வீடு தாக்கப்படிருப்பதாக, ஆர்எஸ்எஃப் அமைப்பின் ஆசிய- பசிபிக் பணியகத்தின் தலைவர் டேனியல் பாஸ்டார்ட் கூறியதாக தி வயர் கூறியுள்ளது.

போராடும் விவசாயிகளை பத்திரிகையாளர்கள் சந்திக்கத் தடை – டெல்லி காவல்துறை நடவடிக்கை

”இந்தப் பத்திரிக்கையாளர்களைப் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளை எடுப்பதோடு, அச்சுறுத்தல்காரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் காவல்துறையை கேட்டுக்கொள்கிறோம் என்றும், இன்னுமொரு கௌரி லங்கேஷ் சம்பவம் நிகழ்ந்தால், பத்திரிக்கை சுதந்திரம் பாதிக்கப்படுவதோடு, உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் பெயருக்குக் களங்கம் ஏற்படும்” என அவர் கூறியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்ட விரோத நடவடிக்கைகளை வெளிப்படுத்துவது தொடர்பான, விசாரணை காரணமாக, நேரடி மற்றும் மறைமுக தாக்குதல்களுக்குத் தீக்சித் ஆளாகி இருப்பதாகவும், கடுமையான சட்டங்கள்மூலம் கடத்தல் மற்றும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த அசாம் மாநில சிறுமிகள் தொடர்பான தீக்சித் தங்களுக்கு பங்களித்தாரென தி வயர் கூறியுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்