Aran Sei

’அப்பாவி நபர் கொடூரமாக கொல்லப்பட்டிருக்கிறார் ’ – டெல்லி கலவரத்தில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் மறுப்பு

டெல்லி கலவரத்தில் குற்றம்சாட்டப்பட்ட ஆஷிஷ் குமாருக்கு,  ஜாமீன் மறுத்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், டெல்லியில் நடைபெற்ற வகுப்புவாத கலவரத்தின்போது, மாற்று மதத்தினை சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்திற்காக ‘அப்பாவி நபர் கொடூரமாக கொல்லப்பட்டிருக்கிறார்’. இந்த குற்றச்சாட்டிற்காக கைதுச் செய்யப்பட்டவருக்கு ஜாமீன் வழங்க முடியாது என அந்தத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலவரக் கும்பலின் ஒரு பகுதி இருந்ததோடு, இரண்டு இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டதற்கு காரணமாக இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ஆஷிஷ் குமாரின் ஜாமீன் மனு, ககார்தூமா நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதி வினோத் யாதவ் விசாரித்தார். அப்போது குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஜாமீனுக்கு வழங்கப்பட்டால் சாட்சிகள் மிரட்டப்பட வாய்ப்பிருக்கிறது என தெரிவித்ததாக, லைவ் லா இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

மஹாராஷ்ட்ராவில் ஆளுநருக்கு அரசு விமானம் தர மறுப்பு – முதல்வர் மன்னிப்பு கேட்கவேண்டும் என பாஜக கோரிக்கை

 

பிப்ரவரி 26, 2020 ஆம் தேதி காலை, 30 முதல் 40 நபர்களைக் கொண்ட ஆயுதம் தாங்கிய கும்பல், சனோபர், சுனில் குமார் சுலைமான் ஆகியோரை சுற்றி வளைத்தது. அந்த மூன்று பேரிடமும் அவர்களது அடையாள அட்டை காண்பிக்குமாறு அந்தக் கும்பல் கூறியது. அடையாள அட்டை காண்பித்த பிறகு சுனில் குமாரை அங்கிருந்து கிளம்ப சொன்ன அந்தக் கும்பல், சனோபர் மற்றும் சுலைமானை தாக்கத் தொடங்கியது என அரசு தரப்பு வாதிட்டது.

சனோபரை இரும்பு தடி கொண்டு தாக்கியதில் மயக்கமடைந்தார். பின்னர் சுயநினைவு வந்ததும், தப்பிச்சென்றார், ஆனால் சுலைமான்,”முகம், தலை, மார்பு, வயிறு மற்றும் உடலின் பல்வேறு பகுதிகளில் இரக்கமின்றி தாக்கப்பட்டார்” என்று அரசு தரப்பு தெரிவித்துள்ளது.

“பணக்காரர்களால், பணக்காரர்களுக்காக, பணக்காரர்களே உருவாக்கிய பட்ஜெட்” – ப.சிதம்பரம் கடும் தாக்கு

இந்தக் காக்குதலில் சுயநினைவை இழந்த சுலைமானை, அந்தக் கும்பல் சாக்கடையில் வீசிச் சென்றது.  அவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக, ஜிடிபி மருத்துவமனைக்குக் கொண்டு  செல்லப்பட்ட நிலையில், அங்குச் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

2020-ம் ஆண்டு பிப்ரவரி 23 முதல் 26 வரை நடைபெற்ற கலவரத்தில், சுலைமான் உட்பட 53 நபர்கள் கொல்லப்பட்டனர். சுமார் 200 நபர்கள் படுகாயமடைந்தனர்.

காவல்துறை ஆதாரங்களை வழங்கவில்லையென வாதிட்ட ஆஷிஷ் குமாரின் வழக்கறிஞர், ஆஷிஷ் குமார், “இந்திய தண்டனைச் சட்டம் 149ன் உதவியால்”, கொலை அல்லது கொலை முயற்சி செய்யும் விதமாக “சட்டவிரோத பொருட்களை வைத்திருந்தார்” என கருத முடியாது என்று கூறினார்.

மக்பூல் பட், அஃப்சல் குரு நினைவு தினம் – காஷ்மீரில் முழு அடைப்பு

எவ்வாறாயினும், அரசுத் தரப்பு தாக்கல் செய்த சாட்சியங்களின் அடிப்படையில், மாற்று சமூகத்தினை சேர்ந்தவர், என்ற ஒரே காரணத்திற்காக கலவர கும்பலால் ஆயுதம் கொண்டு தாக்கப்பட்டதில் தான் சுலைமான் உயிரிழந்தார் என்ற குற்றச்சாட்டில் முகாந்திரம் இருக்கிறது என நீதிபதி தெரிவித்தார்.

சுலைமான் உடலில் இருந்த காயங்களின் எண்ணிக்கையும், தன்மையும், அந்தக் கும்பல் செய்த மூர்க்கத்தனமான செயலின் தீவிரத்தை காடுவதாக நீதிபதி யாதவ் குறிப்பிட்டார்.

ஆஷிஷ் குமாரின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதி யாதவ், இதே போன்ற ஒத்த குற்றச்சாட்டில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவரின் ஜாமீன் மனுவும் ஏற்கனவே நிராகரிக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டினார்.

சிங்காரவேலர்: தொழிலாளர் வர்க்க மாவீரன் – பேரறிஞர் அண்ணா

டெல்லி கலவரத்தில் ஒரு சார்பாகவும், உடந்தையாகவும் டெல்லி காவல்துறை  இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டு வந்த நிலையில், காவல் துறையை மத்திய அரசு பாராட்டியுள்ளது.

மக்களவையில் கேள்வி ஒன்றிற்கு, எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய உள்துறை  இணை அமைச்சர், ஜி கிஷன் ரெட்டி, ”டெல்லி கலவரத்தின்போது டெல்லி காவல்துறை விரைவாகவும், பாரபட்சமன்ற, நியாயமான முறையில் செயல்பட்டது. கலவரத்தைக் கட்டுப்படுத்த விகிதாச்சார மற்றும் பொருத்தமான நடவடிக்கைகளை எடுத்தது” என கூறினார்.

”டெல்லி காவல்துறை எடுத்த நேர்மையான, அர்பணிப்புடன் கூடிய இடைவிடாத முயற்சிகள், கலவர சூழ்நிலையை விரைவில் மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வந்ததோடு, கலவரம் டெல்லியின் பிற பகுதிகளுக்குப் பரவாமல் தடுத்தது” எனவும் ஜி கிஷன் ரெட்டி தெரிவித்தார்.

தி வயர் இணையதளத்தில் வெளியான செய்தியின் தமிழாக்க சுருக்கம்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்