“நம்முடைய ராணுவ வீரர்கள் குண்டு தகர்க்காத வண்டியில்லாமல், தியாகிகள் ஆவதற்கு அனுப்பப்படுகிறார்கள். ஆனால் பிரதமருக்கு 8400 கோடியில் விமானம்”
தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பதிவிட்டுள்ள, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அதற்கு மேல் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
हमारे जवानों को नॉन-बुलेट प्रूफ़ ट्रकों में शहीद होने भेजा जा रहा है और PM के लिए 8400 करोड़ के हवाई जहाज़!
क्या यह न्याय है? pic.twitter.com/iu5iYWVBfE
— Rahul Gandhi (@RahulGandhi) October 10, 2020
இரண்டு நிமிடம் 19 நொடிகள் ஓடக்கூடிய அந்த வீடியோவில், ராணுவ வீரர்கள் சிலர் ஒரு டிரக்கில் அமர்ந்து தங்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள். வெடிகுண்டு தாக்குதலில் இருந்து பாதுகாப்பு அளிக்கக்கூடிய ‘புல்லட் புரூஃப்’ வாகனம் தங்களுக்கு அளிக்கப்படவில்லை என்று அவர்கள் வருத்தம் தெரிவிக்கிறார்கள்.
அத்துடன், அந்தப் பகுதியில் போதுமான அளவு ‘புல்லட் புரூஃப்’ வாகனம் இல்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
இந்த வீடியோ எங்கு எப்போது எடுக்கப்பட்டது என்ற விவரம் தெரியவில்லை.
இதேபோல், கடந்த வியாழக்கிழமை, ராகுல் வெளிட்டிருந்த ஒரு பதிவில் “பிரதமர் அவருக்காக 8400 கோடி ரூபாயில் விமானம் வாங்கியுள்ளார்” என்பதை குறிப்பிட்ட, இந்தப் பணத்தில் சியாச்சின்- லடாக் எல்லையில் பணியாற்றும் ராணுவ வீர்களுக்கு என்னவெல்லாம் வாங்கலாம் என்று பட்டியலிட்டிருந்தார்.
PM ने अपने लिए 8400 करोड़ का हवाई जहाज़ ख़रीदा।
इतने में सियाचिन-लद्दाख़ सीमा पे तैनात हमारे जवानों के लिए कितना कुछ ख़रीदा जा सकता था:
गरम कपड़े: 30,00,000
जैकेट, दस्ताने: 60,00,000
जूते: 67,20,000
ऑक्सिजन सिलेंडर: 16,80,000PM को सिर्फ़ अपनी इमेज की चिंता है सैनिकों की नहीं। pic.twitter.com/uQf038BiJj
— Rahul Gandhi (@RahulGandhi) October 8, 2020
அந்தப் பட்டியலில் “குளிரிலிருந்து பாதுகாக்கும் உடைகள் – 30,000, மேல் கோட்டுகள் மற்றும் கையுறைகள் – 60,00,000, காலணிகள் – 67,20,000 மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் – 16,80,000” வாங்கலாம் என்று டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
ராணுவ வீரர்களுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதில் தாமதம் இருப்பதாக மத்திய தணிக்கைத்துறை தெரிவித்ததைச் சுட்டிக்காட்டி, நாடாளுமன்ற பொது கணக்குக் குழு, லடாக்கிற்குச் சென்று ஆய்வு மேற்கொள்ள, மக்களவை தலைவரிடம் அனுமதி கேட்டுள்ளது தொடர்பாக வெளியான செய்தியைச் சுட்டிக்காட்டி மேற்கொண்டவாறு ராகுல்காந்தி பதிவிட்டிருந்தார்.
மிக முக்கியமான நபர்கள் பயணிப்பதற்கான விமானத்தை வாங்குவதற்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஆட்சியில் அனுமதி வழங்கப்பட்டதாகவும், அந்த விமானம் தற்போது வந்து சேர்ந்திருப்பதாகவும் அரசு தரப்பு வட்டாரங்கள் உறுதி செய்துள்ளதாக ‘தி இந்து’ செய்தி வெளியிட்டுள்ளது.
குடியரசு தலைவர், குடியரசு துணை தலைவர் மற்றும் பிரதமர் பயணிப்பதற்கான ‘ஏர் இந்தியா ஒன்’ என்று அழைக்கப்படும் இரண்டு சிறப்பு விமானங்களை அமெரிக்க நிறுவனமான போயிங் தயாரித்துள்ளது.
சிறப்புப் பாதுகாப்பு வசதிகள் உட்பட பல நவீன வசதிகள் கொண்ட B777 என்ற இந்த விமானத்தின் முதல் விமானம் கடந்த அக்டோபர் 1-ம் தேதி அமெரிக்காவிலிருந்து டெல்லிக்கு வந்து சேர்ந்தது.
மற்றொரு விமானம் விரைவில் இந்தியா வந்து சேரும் என்றும் இந்த இரண்டு விமானத்தின் விலை சுமார் 8400 கோடி ரூபாய் என்றும் அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக ‘ஃபர்ஸ்ட் போஸ்ட்’ செய்தி வெளியிட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.