Aran Sei

தேர்தல் ஜனநாயகத்தில் இருந்து தேர்தல் எதேச்சதிகார நாடாக மாறி வரும் இந்தியா – ஸ்வீடன் ஆராய்ச்சி நிறுவன ஆய்வில் தகவல்

தேர்தல் ஜனநாயக நாடு பட்டியலில் இருந்த இந்தியா, தற்போது தேர்தல் எதேச்சரிகார நாடு பட்டியலில் வகைப்படுத்தப்பட்டிருப்பதாக, ஸ்வீடனை சேர்ந்த சுயாதீன ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வுமூலம் தெரியவந்துள்ளதாக, தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

கோதன்பர்க் பல்கலைக்கழகத்தை அடிப்படையாக கொண்டு செயல்படும் சுயாதீன ஆராய்ச்சி நிறுவனமான வி-டெம் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், இவ்வாறு குறிப்பிடப்பட்டிருப்பதாக, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டு முதல் ஆய்வு மேற்கொண்டு வரும் வி-டெம் ஆய்வு நிறுவனம் கடந்த ஆண்டு வெளியிட்ட ஆய்வறிக்கையில், இந்தியா சுதந்திர நாடு என்ற அந்தஸ்தை இழந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

மம்தாவிற்கு எண்ணற்ற காயங்கள்: மக்களின் சக்தியை பாஜக பார்க்கும் – திரிணாமுல் எம்.பி.கருத்து

2020 ஆம் ஆண்டில் இருந்து எடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில், வெளியிடப்பட்டுள்ள இந்த ஆண்டு அறிக்கையில் இந்தியா ’தேர்தல் எதேச்சதிகார‘ நாடாக வகைப்பட்டுத்தப்பட்டுள்ளது என தி வயர் கூறியுள்ளது.

2019 ஆம் ஆண்டில் இந்தியாவின் வகைப்பாடு ’மிகவும் நிச்சயமற்றதாக’ இருந்தது, ஏனெனில் அடிப்படை தரவு தெளிவாக இல்லை என வி-டெம் கூறியிருப்பதாக, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டில் மேலும் சிறந்த தரவுகளுடன், இந்தியா 2019 ஆம் ஆண்டு முதல் ஒரு தேர்தல் எதேச்சரிகார நாடாக வகைப்படுத்தப்பட்டுள்ளது என ஆய்வு கூறுவதாக, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடவுளை ‘அல்லாஹ்’ என அனைத்து மதத்தினரும் அழைக்கலாம்: மலேசியா உயர் நீதிமன்றம் உத்தரவு

இந்தச் சரிவின் மூலம், 180 நாடுகள் கொண்ட பட்டியலில் முதல் 50 விழுக்காடு நாடுகளில் இருந்த இந்தியா, இரண்டாம் 50 விழுக்காடு நாடுகளுக்குக் கீழறங்கியுள்ளது என்றும், கடந்த ஆண்டு 90 வது இடத்தில் இருந்த இந்தியா, இந்த ஆண்டில் 97 வது இடத்திற்கு சரிந்துள்ளதாக, வி-டெம் கூறுவதாக, தி வயர் கூறியுள்ளது.

’எதேச்சதிகாரமான வைரஸ்’ எனப் பெயரிப்பட்டுள்ள இந்த ஆண்டறிக்கையில், உலகின் 68 விழுக்காடு மக்கள் எதேச்சதிகாரத்தின் கீழ் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும், ’எதேச்சதிகாரத்தின் மூன்றாவது அலையை’ வழிநடத்தும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என வி-டெம் தெரிவித்திருப்பதாக, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

’ஜனநாயகம் உடைந்துவிட்டது : இந்தியா’ என்ற தலைப்பில் இந்தியாவிற்கு என வி-டெம் தனியாக ஒரு ஒதுக்கியுள்ள அத்தியாயத்தில், ”உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக இருந்த இந்தியா, தேர்தல் எதேச்சதிகார நாடாக மாறுயுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளதாக, தி வயர் தெரிவித்துள்ளது.

‘இஸ்லாமிய தேசம் அமைக்க காங்கிரஸ்க்கு வாக்களியுங்கள்’ – பேசாத காணொளியை திரித்து ட்விட்ட்ரில் பதிவிட்ட வலதுசாரிகள்

2014 ஆம் ஆண்டில் நரேந்திர மோடி தலையிலான ஆட்சி, இந்து தேசியவாதத்தை ஊக்குப்படுத்துவது, இந்தியாவின் ஜனநாயக குறியீட்டைக் குறைத்துள்ளது என்றும், 2013 ஆம் ஆண்டில், 0.57 விழுக்காடாக இருந்த ஜனநாயக குறியீடு, 2020 ஆம் ஆண்டில் 0.34 விழுக்காடாக சரிந்துள்ளது என்றும் அதில்  குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊடகதணிக்கை, சிவில் சமூக அமைப்புகளின் அடக்குமுறை மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்தின் தன்னாட்சி அதிகாரம் ஆகியவை இந்தச் சரிவுக்குக் காரணம் என அறிக்கையில் குறிப்பிட்டப்பட்டிருப்பதாக, தி வயர் தெரிவித்துள்ளது.

கொரோனா ஊடரங்கில் ஊடகவியலாளர்கள் மீது வழக்குகள், எதிர்கருத்து இருப்பவர்கள்மீது தேசத் துரோக மற்றும் சட்டவிரோத செயல்கள் (தடுப்பு) சட்ட வழக்குகள், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டக்காரர்கள் மீதான வன்முறை, விவசாயிகள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை போன்ற சம்பவங்களால்,  சர்வதேச அளவில் இந்தியாவின் மதிப்பு குறைந்துள்ளது என வி-டெம் கூறியிருப்பதாக, தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்