Aran Sei

துப்பாக்கியால் சுடவும் தயங்கமாட்டோம்: சீனாவுக்கு எச்சரிக்கை

credit: indiatvnews.com

ந்திய ராணுவ நிலைகளை நோக்கி சீனா முன்நோக்கி வந்தால் துப்பாக்கியால் சுட படைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இந்திய அரசின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் லடாக்கில் கடந்த ஐந்து மாதத்துக்கு மேலாக பதற்றநிலை நீடித்துவருகிறது. அதை தணிப்பதற்கு இராணுவம் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் தொடங்கி உயர்மட்ட அரசியல் பேச்சுவார்த்தைகள் வரையில் இரு நாடுகளும் நடந்து வருகின்றன.

செப்டம்பர் 10-ம் தேதி மாஸ்கோவில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டுக்கிடையில் இரு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களும் சந்தித்துக்கொண்டனர். அதன் பிறகு, வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், இரு நாடுகளும் எல்லையில் பதற்றநிலையை உடனடியாக குறைப்பதற்கு தங்களது படைகளை விலக்கிக்கொள்வதாக ஒப்புக்கொண்டன.

இந்த சந்திப்புக்கு பிறகு செப்டம்பர் 22-ம் தேதி இரு நாட்டு இராணுவ தளபதிகளும் சீனாவின் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள மால்டோவில் சந்தித்துக்கொண்டனர். அக்கூட்டத்தில், இரு நாடுகளும் இனி கூடுதலாக படைகளை எல்லைக்கு அனுப்ப மாட்டோம் என்று ஒப்புக்கொள்வதாக கூட்டறிக்கை வெளியிட்டன.

இந்நிலையில் இந்தியாவின் நிலைகளை பாதுகாப்புதற்கு இராணுவ வீரர்கள் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்வார்கள் என்றும் துப்பாக்கியால் சுடவதற்கும் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் சீனாவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேடு குறிப்பிட்டுள்ளது.

இந்திய-சீன எல்லையில் கள நிலவரம் வழக்கம் போல்தான் உள்ளதாகவும் எல்லையின் மறுபுறத்திலும் நிலவரம் இயல்பாக இருப்பதாகவும் மத்திய அரசின் பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த அதிகாரி தெரிவித்திருப்பதாக தி இந்து நாளேடு கூறுகிறது.

அண்மையில் நடந்த இரு நாட்டு இராணுவ தளபதி அளவிலான பேச்சுவார்த்தையை குறித்து அந்த மூத்த அதிகாரி குறிப்பிடுகையில், லடாக்கில் சமீப காலமாக நடந்துவரும் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பதாக சீன தரப்பில் கூறப்பட்டது. ஆனால், இந்தியாவை பொறுத்தவரையில் மொத்தமாக கிழக்கு லடாக் பகுதியில் நிலவக்கூடிய பிரச்சினைகளுக்கு ஒரேடியாக தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதாக கூறினார்.

அதேபோல், சீனா முன்னர் இருந்த எல்லைக்கு தனது இராணுவம் நகர்த்த வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

லடாகில் உள்ள டெப்சாங்க் பகுதியில் முன்பு இந்திய ராணுவம் ரோந்து மேற்கொண்டிருந்த பகுதிகளுக்கு தற்போது ரோந்து செல்ல முடியாமல் சீனா தடுத்துள்ளதை பற்றி அவர் குறிப்பிடுகையில், நாங்கள் அப்பகுதிகளை உரிமை கோருவதை கைவிடவில்லை என்றும் சூழல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தியுள்ளோம் என்று அவர் கூறினார்.

இந்திய சீன எல்லையில் பதற்றம் குறையாத நிலையில் வரும் வாரம் இரு நாட்டு தளபதிகள் அளவிலான 7-வது சுற்றுப்பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்